இது சிம்பு – செல்வராகவன் படம் தானா..? : ஆச்சரியத்தில் ‘கான்’ யூனிட்
ஆமாம், இப்படித்தான் ‘கான்’ படப்பிடிப்பில் சிம்புவும் – செல்வராகவனும் நடந்து கொள்வதைப் பார்த்து பட யூனிட்டே ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் வேலை செய்து கொண்டிருக்கிறதாம்.
‘இரண்டாம் உலகம்’ படம் வரை ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார் செல்வராகவன். 7 மணிக்கு முதல் ஷாட் என்றால் மொத்த டீமும் காத்திருக்கும். ஆனால் செல்வாவோ 12 மணிக்குத்தான் முதல் ஷாட்டை வைப்பாராம். பிறகு 6 மணிக்கு முடியும் என்று நினைத்தால் இரவு 2 மணிவரை படப்பிடிப்பை இழுத்து காட்சிகளை எடுத்துக் கொண்டிருப்பார். அதோடு அதன் ஷூட்டிங் எப்போது முடியும் என்பது கூட யாருக்கும் தெரியாது.
சிம்புவோ வேறு ரகம், அவர் எப்படி, எந்த நேரத்தில், எந்த மூடில் ஸ்பாட்டுக்கு வருவார் என்றே சொல்ல முடியாது. காலை 6 மணிக்கு முதல் ஷாட் என்றால் சாயங்காலம் 6 மணிக்கு வந்து நின்று ”எனக்கு இன்னைக்கு மூடு சரியில்ல ஷூட்டிங்கை கேன்சல் பண்ணுங்க” என்பாராம்.
இப்படி இருந்த செல்வராகவனும், சிம்புவும் இப்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?
அந்த ஆச்சரியம் தான் ‘கான்’ படப்பிடிப்பில் தினந்தோறும் அரங்கேறுகிறதாம்.
காலை 7 மணிக்கு முதல் ஷாட் என்றால் ஆறே முக்காலுக்கே ஸ்பாட்டில் நிற்கிறாராம் இயக்குநர் செல்வராகவன். அதேபோல சிம்புவும் 7 மணிக்கு கால்ஷீட் என்றால் 6 : 59க்கே ஸ்பாட்டில் தயாராக இருக்கிறாராம்.
இப்படித்தான் ‘கான்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்த இருவர்களின் ஒத்துழைப்பினால் 12 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு 9 நாட்களில் முடிந்திருக்கிறது.
சரி அதெப்படி இருவருக்கு இப்படி ஒரு ஞானோதயம்?
அது வேறு ஒன்றுமில்லை. இருவரும் இப்படி டெடிகேஷனோட ஒர்க் பண்றதுக்கு பின்னணியில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தான் முக்கிய காரணமாம்.
அவர் மேற்பார்வையில் தான் ‘கான்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதனால் தான் ஷூட்டிங் எந்த தடையும் இல்லாமல் வேகமெடுக்குது என்கிறார்கள்.
நீங்க நல்லா இருப்பீங்க தாயீ…