‘கபாலி’ டைட்டில் பிரச்சனை ஓவர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு கபாலி என்று டைட்டில் வைத்திருந்தார் அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்.
டைட்டிலை அவர் தனது ட்விட்டரில் அறிவித்த சில நொடிகளுக்குள்ளாகவே ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் முன்னணியின் இடம் பிடித்தது.
ரஜினி ரசிகர்களும் டைட்டிலை வரவேற்று கொண்டாடினார்கள்.
இந்த உற்சாகக் கொண்டாட்டங்களுக்கிடையே இந்த டைட்டில் ஏற்கனவே இன்னொரு படத்துக்கு வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்பு இதே டைட்டிலில் இன்னொரு பட்ஜெட் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் ஆடியோ பங்ஷன் கூட நடந்து படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனால் கபாலி டைட்டில் மாறுமோ என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதோடு இந்த டைட்டில் ரஜினிக்கு பிடித்த டைட்டில் என்பதால் எப்படியாவது அதை வாங்கி விட வேண்டும் என்று நினைத்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
உடனே சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் தலைவருக்காக இந்த டைட்டிலை நாங்க விட்டுக் கொடுக்கிறோம் என்று கபாலி டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டார்கள்.
இதனால் கபாலி டைட்டில் உறுதியாகி விட்டது. படப்பிடிப்பு அடுத்த மாதம் 18-ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.