ஏப்ரல் ரிலீசுக்கு தயாராகும் அரவிந்த்சாமியின் ‘கள்ள பார்ட்’

Get real time updates directly on you device, subscribe now.

வில்லனாக ரீ – எண்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி மீண்டும் படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் ஒன்று தான் ‘கள்ளபார்ட்’.

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.

திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் பி. ராஜபாண்டி

வித்தியாசமான கதைக்களத்தோடு ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை பற்றி இயக்குனர் ராஜபாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தோம்…

”அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவர். இதில் அவருக்கு அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது திரையில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் இந்தப்படம் அவருக்கு சிகரமாய் இருக்கும்.

நாயகி ரெஜினா இதில் டான்ஸ் டீச்சர் கேரக்டரில் நடிக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது” என்றார்.