ஹிந்திப் படத்தை கை விட்ட கமல்ஹாசன்!
”விஸ்வரூபம்’ படம் ஹிந்தியில் ரிலீசாகி இரண்டு வருடங்களாகி விட்டது. அதன்பிறகு அவர் அந்தப் பக்கம் கவனம் செலுத்தவில்லை.
சமீபத்தில் அவர் மீண்டும் பிரபல பாலிவுட் ஹீரோ சைப் அலிகானுடன் ‘அமர் ஹெய்ன்’ என்ற படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார். படத்தையும் அவரே தயாரிக்கப் போகிறார் என்று செய்தி வெளியானது. அதைக் கேள்விப்பட்டதும் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
ஆனால் தற்போது தனது ஹிந்திப்படத்தை கமல் கை விட்டு விட்டதாக புதிய செய்தி வெளியாகியிருக்கின்றது.
அதற்கு முக்கிய காரணம் அவரது ‘பாபநாசம்’ படம் தானாம்.
அதிக பட்ஜெட் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அந்தப்படம் நல்ல வசூலைத் தந்திருப்பது உண்மையான வெற்றியைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்ட கமலுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதாம்.
இதனால் இன்னும் சில தமிழ்ப்படங்களில் நடித்து விடும் ஆசையில் இருக்கும் அவர் தூங்காவனம் படத்துக்குப் பிறகு இரண்டு தமிழ்ப்படங்களை தயாரித்து நடிக்க திட்டமிட்டு வருகிறார்.
அதற்கான அறிவிப்பை ‘தூங்காவனம்’ ரிலீசுக்குப் பிறகு வெளியிட எண்ணியிருக்கும் அவர் கொஞ்ச நாளைக்கு தமிழ்ப்படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.