‘இனி வெல்வது மட்டும் தான் ஓரே வழி’ – கமல்ஹாசன் பேச்சு!

Get real time updates directly on you device, subscribe now.

டிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவர் ஆரம்பித்த இந்தக் கட்சியில் மற்ற கட்சியில் உள்ள தொண்டர்கள் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றும் கூட புதுவையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

Related Posts
1 of 2,259

இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன் ”அன்பையும் நேர்மையும் தேடி வந்துள்ளீர்கள், நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். அதனால் தான் நாமும் இணைத்துள்ளோம். எனக்கு வழி சொன்னவர்கள் நீங்கள் தான். இனி நடப்பதெல்லாம் செயலாக இருக்க வேண்டும்.

இந்த கூட்டம் வெறும் ஊர்வலம் செல்வதற்காக அல்லாமல் நமக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அரசாங்கத்தை தூண்டுவது அல்லது அரசையே அமைப்பதாக இருக்க வேண்டும். உங்களை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை கூடுகிறது. இனி வெல்வது மட்டும் தான் ஒரே வழி” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.