கதிர்- விமர்சனம்
விவசாயிகளை காப்பாற்ற யோசனை சொல்லும் படங்கள் செய்யும் சோதனைகள் ஏராளதாராளம். அந்த வகையில் கதிரும் ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறான். காதல் காமெடி என பயணிக்கும் படத்தில் திடீரென விவசாய மேட்டரைப் புகுத்தி, மோட்டிவேசன் மோட்டாரை ஆன் செய்திருக்கிறார் இயக்குநர்.
நாயகனாக வெங்கடேஷ் ஓரளவு ஒப்பேத்தியிருக்கிறார். முதல்படம் என்பதால் அடுத்தடுத்த படங்களில் தேறிடுவார். அடுத்ததாக சந்தோஷ் பிரதாப் சிறிய கேரக்டரில் வந்தாலும் மனதில் பதிகிறார். அவர் வரும் அந்த ப்ளாஸ்பேக் காட்சிகளின் பழைமை நன்றாக இருக்கிறது. வெங்கடேஷ் நண்பர்கள் கேரக்டரில் வரும் அனைவருமே நல்ல நடிப்பையே கொடுத்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசையும் அப்படியே. ஒளிப்பதிவில் கோவை அழகை கண்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார் கேமராமேன்..
படத்தின் பெரும் பிரச்சனையே தெளிவற்ற திரைக்கதை தான். ஒரேயொரு விசயத்தை மட்டும் வைத்து கதை கட்டியிருக்கலாம்
விவசாயம், புரட்சி, ஜாலி, காதல், அது, இது என இலக்கற்று பாயும் கதையில் எதையுமே சரியாக செய்யாமல் கதிர் கவலையளிக்கிறான்
2/5