இன்னும் மூணு பேர் தான் பாக்கி : ‘கிடாரி’யிலும் அமைஞ்சிருக்கு ஹீரோயின் செண்டிமெண்ட்!
‘வெற்றிவேல்’ படத்தைப் பார்த்த அத்தனை பேரும் சசிகுமாருக்கு ஏத்த ஜோடியா இருக்குப்பா இந்தப் பொண்ணு என்று சொன்னவர்களில் பெரும்பாலானோரின் சாய்ஸ் நிகிலா விமல் தான். அந்தளவுக்கு படத்தில் இருவருடைய ஜோடிப்பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.
அதை தெரிந்த கொண்டதாலோ என்னவோ இதோ தான் தயாரித்து நடித்து வரும் ‘கிடாரி’ படத்திலும் நிகிலா விமலையே தனக்கு ஜோடியாக்கி விட்டார் சசிகுமார்.
பிரசாத் முருகேசன் என்கிற அறிமுகம் தான் இப்படத்தின் இயக்குநர்.
”இந்தப் படத்தோட கதையைக் கேட்ட உடனே நானே இதை டைரக்ட் பண்ணியிருக்கலாமேன்னு தோணுச்சு. அந்தளவுக்கு நல்லா இருந்துச்சு. அப்புறம் என்னோட தயாரிப்புலேயே இந்தப்படம் தான் மிக மிக குறைந்த நாட்கள்ல எடுத்திருக்கோம்” என்றார் சசிகுமார்.
ஸ்வாதி, அனன்யா, லட்சுமிமேனன்ன்னு என் கூட நடிச்ச எல்லா ஹீரோயின்களும் என்னோட ரெண்டு படங்கள் நடிச்சிட்டாங்க. அதே மாதிரி வெற்றிவேல் படத்துக்கப்புறம் இதுல நிகிலாவும் நடிச்சிருங்காங்க. இன்னும் வரலட்சுமி, மியா ஜார்ஜ், லாவண்யான்னு மூணு ஹீரோயின்கள் தான் நடிக்கல. கூடிய சீக்கிரம் அவங்க கூடவும் நடிச்சிருவேன்.
‘வெற்றிவேல்’ படத்துல நிகிலா ரொம்ப சைலண்ட்டா நடிச்சிருப்பாங்க. ஆனா நெஜத்துல அவங்க ரொம்ப துறுதுறுன்னு ஷூட்டிங் ஸ்பாட்ல இருப்பாங்க. அதைப் பார்த்துத்தான் இந்தப் படத்தோட கேரக்டருக்கு நிகிலா கரெக்ட்டா இருப்பாங்கன்னு நானும் கேமராமேனும் டைரக்டர்கிட்ட சொன்னோம். அப்படித்தான் நிகிலா இந்தப்படத்துல என்கூட நடிக்க வந்தாங்க என்று நிகிலா விமல் செட்டான செண்டிமெண்ட்டையும் சொன்னார்.
இன்னொரு ஹிட் காம்போ ரெடி!