கிங் ஆப் கொத்தா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நல்ல ரவுடிக்கும் கெட்ட ரவுடிக்குமான சண்டை. இருவரும் எப்படி அடைஞ்சாங்க end-ஐ இதான் கிங் ஆப்பு கொத்தா

1986-ல் கொத்தா எனும் ஏரியாவில் டானாக இருந்தவர் துல்கர் சல்மான். அவருடன் இருந்த நண்பனே அவருக்கு எதிரியாக மாற, குடும்ப எமோஷ்னல் அவரைத் தாக்க, கூடவே காதலியும் துரோகமிழைக்க துல்கர் வெளியூர் செல்கிறார். பின் 1996-ல் அவர் திரும்பி வருவதற்கான காரணம் கதையில் நிகழ அவர் திரும்ப கொத்தாவுக்கு வருகிறார். வந்த பின் கொத்தாவில் என்ன கொடுமையெல்லாம் நடந்தது என்பதைப் படம் பேசியுள்ளது.

கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் நியாயமான நடிப்பை வழங்கியுள்ளார் துல்கர் சல்மான். அவரின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்திருப்பது படத்தின் பலம். ஐஸ்வர்யா லட்சுமி கிடைக்கும் கேப்களில் எல்லாம் தன்னைப் புல்லப் செய்துகொள்கிறார். பிரசன்னா சரண் ஆகிய தமிழ் முகங்களும் படத்தில் சிறியதாக தடம் பதிக்கிறார்கள். கண்ணன் பாயாக நடித்துள்ள வில்லன் கேரக்டரும் சிறப்பு. வில்லனின் மனைவி, அம்மா கேரக்டர்களின் வார்ப்பும் கூட அருமை

இசையால் படத்தை எந்தளவிற்கு என்கேஜிங்காக வைக்க முடியுமோ அந்தளவிற்கு வைத்துள்ளார் இசை அமைப்பாளர். தரமான ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளது. எடிட்டர் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கால் மணி நேர புட்டேஜை தூக்கியிருக்கலாம்.

மேக்கிங் ஆக படம் மிரட்டியிருந்தாலும் கதை அரதப்பழசு என்பதால் படம் நம்மை ஈர்க்க தடுமாறுகிறது. மேலும் யூகிக்கக் கூடிய கதை நகர்வும், செயற்கையான எமோஷ்னலும் வொர்க்கவுட் ஆகவில்லை. வெறும் துல்கரின் ஆக்‌ஷன் மட்டுமே போதுமென்கிறவர்களுக்கு மட்டுமே கிங் ஆப் கொத்தா ..மத்தவங்களுக்குப் படம் இருக்கும் வெத்தா
2.25/5