சென்சார் அதிகாரிகளே ரெகமெண்ட் செய்த ‘குரங்கு கைல பூமாலை’
‘கோலிசோடா’ படத்துல நடிச்ச நாலு பசங்க சூப்பரா பிக்கப் ஆயிட்டாங்க. அவங்க மத்தியில அம்சமா ஒரு சின்னப் பொண்ணு நடிச்சிருந்ததே அதோட நெலைமை என்னாச்சு என்று பேசிக்கொள்ளும் கோடம்பாக்கத்துக்கு இதோ ‘குரங்கு கைல பூமாலை’யா இருக்கேன் என்று குரல் கொடுக்கிறார் சாந்தினி.
‘கோலிசோடா’வில் ஹீரோயினாக நடித்த சாந்தினியை அதன் பிறகு எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை. ஆனால் சைலண்ட்டாக இந்தப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
கோலிசோடாவில் எப்படி நான்கு பசங்கங்களுக்கு மத்தியில் சோலோவாக பெர்பார்மெண்ட்ஸ் செய்தாரோ அப்படி ஒரு ரோல் தான் இந்தப் படத்திலும் சாந்தனிக்கு என்கிறார் இயக்குநர் கிருஷ்ணன்.
படத்துல ஜெகதீஷ், கெளதம் கிருஷ்ணா, பிரவீன் குமார், கணேஷ்னு நான்கு இளைஞர்கள். ஒருத்தர் தான் உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு ஏமாத்திட்டுப் போனதால மனம் போன போக்குல வாழுற கேரக்டர். இவனுக்கு தன்னோட வலையில சிக்கிற எல்லாப் பொண்ணுங்களையும் காதலிக்கிறா மாதிரி நடிச்சி டிஸ்யூ பேப்பர் மாதிரி யூஸ் பண்ண நெனைக்கிறவன். அடுத்தவன் தன்னோட முறைப்பொண்ணையே திருமணம் செஞ்சுக்கணும்னு ஆசைப்படுறவன். இன்னொருத்தன் ஒரு பொண்ணை காதலிச்சு அவளையே திருமணம் செஞ்சுக்கணும்னு கொள்கை உள்ளவன். அடுத்தவன் தனக்கு திருமணம் எல்லாம் வேணாம், ஆனா டெய்லி ஒரு பொண்ணு வேணும்னு நெனைக்கிறவன். இந்த நாலு பேருங்க மத்தியில சிக்கித் தவிக்கி்ற சாந்தினியோட நெலைமை என்னவாகுங்கிறது தான் இந்த குரங்கு கைல பூமாலை
என்றார் இயக்குநர் கிருஷ்ணன்.
படத்துல நாலு ஹீரோக்களும் புதுசா இருக்காங்களே..? படத்தோட வெற்றிக்கு இது தடையா இருக்காதா? கேட்டவுடன் பதில் வருகிறது தயாரிப்பாளர் அமீர்ஜானிடமிருந்து…
நாங்க கதையைத் தான் ஹீரோவா நம்புறேன் சார். கதை நல்லா இருந்தா படம் கண்டிப்பா ஓடும். அதுக்கு நெறைய படங்களை உதாரணமாச் சொல்லலாம் என்றவர் படம் பற்றிய இன்னொரு ஆச்சரியத் தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
இந்தப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள். படத்தை இண்டர்வெல் வரை பார்த்த்தவங்க ஏ சர்ட்டிபிகேட் தான் கொடுக்கணும்னு நெனைச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா இண்டர்வெல்லுக்குப் பிறகு படத்தை பார்க்க ஆரம்பிச்சவங்க இறுதி 20 நிமிஷம் பார்த்துட்டு படத்துக்கு யு சர்ட்டிபிகேட் கொடுக்கலாம்னு சொன்னாங்க. அதோட படத்துல இந்தக்கால இளவட்ட பசங்களுக்கு நல்ல அட்வைஸ் பண்ணிருக்கீங்கன்னு பாராட்டினாங்க என்றார்.
அதோடு விடவில்லையாம் சென்சார் அதிகார்கள். உடனே தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சாருக்கு போனைப்போட்டு ஒரு நல்ல படத்தைப் பார்த்தோம். நீங்களும் பாருங்கன்னு சொல்லி ரெகமெண்ட் பண்ணினார்களாம். படத்தைப் பார்த்த தாணு சார் ரொம்ப நல்லா பண்ணிருக்கீங்கன்னு வாழ்த்து சொல்லிட்டுப் போனாராம்.
பிரம்மாண்ட வாழ்த்துன்னு சொல்லுங்க…