கோலா பாஸ்கரை ‘மயங்க’ வைத்த செல்வராகவன் அன்கோ!

Get real time updates directly on you device, subscribe now.

cola-baskar

பீப் டோன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் செல்வராகவன் கதையில் அவருடைய மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் 110க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்த கோலா பாஸ்கர் தயாரித்து வருகிறார்.

செல்வராகவனின் பதினைந்து வருட கால நண்பரான இவர், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மாலை நேரத்து மயக்கம், இரண்டாம் உலகம் உட்பட செல்வராகவன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுக்கும் படத்தொகுப்பு செய்தவர்.

இப்படங்கள் தவிர போக்கிரி, வில்லு, யாரடி நீ மோகினி, 3 உட்பட பல வெற்றிப்படங்களில் பணியாற்றி உள்ள கோலா பாஸ்கர் முதன்முறையாக தயாரிக்கும் படம் இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் பாலகிருஷ்ணன் நடிக்கிறார்.

கதாநாயகியாக வாமிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

செல்வராகவன், கோலா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோரின் உதவியாளர்கள் மாலை நேரத்து மயக்கம் படத்தில் அறிமுகமாகிறார்கள்.
செல்வராகவனிடம் உதவியாளராக பணியாற்றிய கீதாஞ்சலி செல்வராகவன் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உதவியாளரான ஸ்ரீதர் டி.எப்.ட்டி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோலா பாஸ்கரின் உதவியாளரான ரூபேஷ் இப்படத்துக்கு படத்தொகுப்பு செய்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருப்பவர் செல்வராகவன் மாலை நேரத்து மயக்கம் படத்திற்கு, உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்த அம்ரித் இசையமைக்கிறார்.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக உருவாகி வருகிறது – மாலை நேரத்து மயக்கம்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாலை நேரத்து மயக்கம் படத்தில் அறிமுகமாகும் வாமிகா ஹிந்தியில் சில படங்களில் நடித்து வருவதால், அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதமானது.
தற்போது அவரது கால்ஷீட் கிடைத்து, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மூணாறில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இம்மாத இறுதியில் இரண்டு பாடல்காட்சிகள் உடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. மாலை நேரத்து மயக்கம் படத்தின் ஆடியோ பங்ஷன் விரைவில் நடைபெற உள்ளது.

செல்வராகவனின் படமென்றாலே மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டே போகும் என்கிற வழக்கமான பழிச்சொல்லை தவிடு பொடியாக்கியிருக்கிறது ‘மாலை நேரத்து மயக்கம்’.