தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
‘மாரி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘மாரி 2’ .
தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
பட வேலைகள் முடிந்தது டிசம்பர் 21-ம் தேதி இப்படம் ரிலீசாகும் என்று சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி அனுமதி பெறாமல் ரிலீஸ் தேதியை அறிவித்ததால் மாரி 2 படம் திட்டமிட்டபடி டிசம்பர் 21-ம் தேதி வருமா? வராதா? என்று ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர்.
இதற்கிடையே இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ‘மாரி 2’ படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது.
டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.