மாரி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

maari-2

ன்னொரு ‘டான்’ கதை தான்.

ஆனா அஜித் மாதிரி படம் முழுக்க கோட்-சூட்டைப் போட்டுக்கிட்டு நடையா நடக்கிற கேரக்டர் இல்ல தனுஷ்.அதையெல்லாம் தூக்கி சாப்பிடுற அளவுக்கு பக்கா தர லோக்கலான கேரக்டர்.

சென்னை திருவல்லிக்கேணி ஏரியாவில் குடியிருக்கும் தனுஷ் அந்த ஏரியாவே மிரண்டு ஓடும் அளவுக்கு மிகப்பெரிய தாதா.

அதே ஏரியாவில் செல்வாக்குடன் இருக்கும் மூத்த தாதாவான சண்முகராஜன் சொல்லும் வேலைகளைச் செய்து முடிப்பது, புறாக்களை வைத்து பந்தயம் நடத்தி காசு பார்ப்பது, அங்குள்ள

கடைகளில் மாமூல் வசூலிப்பது இவைகள் தான் கிடைக்கிற நேரங்களில் அவர் பார்க்கும் மிச்ச மீதி வேலைகள்.

நடத்துகிற எல்லா புறா பந்தயங்களிலும் தனுஷ் வளர்க்கும் புறாக்களே கோப்பகளை அள்ளி வர, எரிச்சலாகும் எதிர் கூட்டணி எப்படியாவது தனுஷின் டான் இடத்தை காலி செய்து விட்டு அந்த

இடத்தை தாங்கள் பிடிக்க திட்டம் போடுகிறார்கள்.

அவர்கள் திட்டத்துக்கு அந்த ஏரியாவுக்கு இன்ஸ்பெக்டராக வரும் விஜய் யேசுதாஸ் உதவுகிறார்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு கொலை வழக்கில் தனுஷை சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். அப்பாடா? நம்மளை பிடிச்ச தொல்லை போயிடுச்சுடா… என்று ஏரியாவாசிகள்

நிம்மதி பெருமூச்சி விடுகிறார்கள்.

ஆனால் அடுத்த நாளே அந்த ஏரியாவில் நடப்பதே வேறு? அது என்ன? ஜெயிலுக்குப் போன தனுஷ் வெளியில் வந்தவுடன் அதே டான் இடத்தைப் பிடித்தாரா? என்பதே கிளைமாக்ஸ்.

தனுஷின் நடிப்புத் திறமைக்கெல்லாம் இந்தப்படம் யானைப்பசிக்கு சோளைப்பொறி போலத்தான். இருந்தாலும் ஏரியாவில் கண்ணில் படுகிற எல்லோரையும் கலாய்ப்பதும், அல்லக்கைகளை

புரட்டி எடுப்பதும், வில்லன் கோஷ்டிகளை நையப்புடைப்பதுமாக படம் முழுக்க தனுஷுக்கு ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஏரியாக்கள் எக்கச்சக்கம். அத்தனையுமே அவரது நடிப்புத் திறமைக்கு

Related Posts
1 of 3

செம தீனி.

இதுபோன்ற கமர்ஷியல் கதைகளில் ஹீரோயின் பார்ட் என்பது மணக்க மணக்க குழம்பை வைத்து விட்டு கடைசியில் போடுகிற கருவேப்பிலை மாதிரி தான் இருக்கும். காஜலின் கேரக்டரும் இப்படத்தில் அப்படித்தான். இருந்தாலும் க்ளோசப் காட்சிகளில் அம்மணியின் முகச்சுருக்கத்தைப் பார்க்கும் போது அவரது வயசை ஆராயச் சொல்கிறது நம் மனசு.

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் முழு ஸ்க்ரீனிலும் பெருத்த உருவமாக வந்து பாடாய்ப்படுத்தி எடுக்கும் ரோபோ சங்கர். இதிலும் காமெடி செய்கிறேன் பேர்வழி ஓளப்பாயில் நாய் ஒணுக்கு போனா மாதிரி வழ வழாவென்று பேசிக்கொண்டே இருக்கிறார். என்ன பேசிலும் ரசிகர்கள் கைதட்டி விசிலப்பார்கள் என்கிற அவருடைய எல்லை மீறிய ஆசைக்கு கிடைப்பது என்னவோ கல்லெறி தான்.

அதே சமயம் தனுஷ் கூடவே அடிதாங்கியாக வரும் வினோத் ரோபோ சங்கர் செய்யும் சேஷ்டைகளிலிந்து நம்மை ரிலாக்ஸ் ஆக வைக்கிறார். குறிப்பாக தனுஷை பார்க்க வரும் காஜல்

அகர்வாலை பார்த்ததும் ப்ப்பா… அப்படி பாக்காதம்மா ரெண்டு உருண்டக் கண்ணும் கீழ விழுந்துறப்போவுது. ஆமாண்ணே கொஞ்சம் பக்கத்துல வந்து பாருங்க… என்கிற ஒற்றை டைமிங்

டயலாக்கில் ரோபோசங்கரின் அத்தனை பஞ்ச் டயலாக்கையும் பெட் ரெஸ்ட் எடுக்க வைத்து விடுகிறார். இனிமே ரோபோ சங்கர் காமெடி பண்றேன்னு வந்த உஷாரா இருங்க இயக்குநர்களே…

ஸ்க்ரீனே தாங்க மாட்டேங்குது…

இந்தப் புள்ளையும் பால் குடிக்குமான்னு யோசிக்கிற முகத்தை வெச்சிருக்கிற பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் தான் வில்லனா வர்றார். அலட்டலே இல்லாம போலீஸ் அதிகாரியா வர்றார்.

மூத்த தாதாவா வர்ற சண்முகராஜன், மைம் கோபி என படத்தில் வருகிற மத்த கேரக்டர்களும் தங்கள் பங்குக்கு பங்கம் வராமல் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

அனிருத்தின் இசையில் பின்னணி இசை காதை கிழித்து தொங்க விட்டாலும், நல்ல வேளையாக பாடல்கள் ரிலாக்ஸ் ஆக வைக்கின்றன.

இயக்குநர் பாலாஜி மோகனோட முதல் ரெண்டு படங்களையும் பார்த்து ரசிக்க ரொம்ப புத்திசாலித்தனம் வேணும்னு தனுஷே பிரஸ்மீட்ல சொன்னார். ஆனா அப்பேர்ப்பட்ட காஸ்ட்லியான மூளையெல்லாம் இந்தப் படத்துக்கு தேவையில்லை. எவ்ளோ டேமேஜான மூளையோட வந்தாலும் படத்தோட கதையோட ஈஸியா ஒட்டிக்கலாம்.

சீனுக்கு சீன் தெகட்ட தெகட்ட தம்மடிச்சிக்கிட்டே இருக்கார் தனுஷ். அட்லிஸ்ட் அதோட எண்ணிக்கையை சென்சார்லயாவது கட் பண்ணிருக்கலாம்.?

க்ரீன் டீ மட்டுமில்ல என்னால கட்டன் சாயாவும் குடிக்க முடியும்னு காட்டுறதுக்காகவே ரொம்ப லோக்கலா இறங்கி ஒரு டஜன் ஆக்‌ஷன் படங்களை மொத்தமாப் பார்த்த திருப்தியோட அனுப்புறார் இயக்குநர் பாலாஜி மோகன்.