மஹாவில் சிம்பு சிறப்பு தோற்றம் மட்டுமில்லை
ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று தான் இதுவரை பேச்சு. ஆனால் இப்போது வேறோர் அப்டேட் தருகிறார் படத்தின் இயக்குநர். இது குறித்து இயக்குநர் ஜமீல் கூறியதாவது…
எல்லோரும் “மஹா” படத்தில் சிம்பு ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முழுமையான உண்மையில்லை.
அவர் சிறப்பு தோற்றம் தான் என்றாலும், அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியமானது, கதையில் அவரது கதாப்பாத்திரம் ஃபிளாஸ்பேக் பகுதியில் 45 நிமிடங்கள் வரக்கூடிய பெரிய பாத்திரம் ஆகும். அவர் ஒரு பைலட்டாக நடித்திருக்கிறார்.
நிஜத்தில் கோவாவில் 30 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த பைலட்டுக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவரது கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அந்த கதாப்பாத்திரத்தை மிகுந்த கவனத்துடன் மெருகேற்றி உருவாக்கியுள்ளோம்.
அவரது கதாப்பாத்திரம் பல ஆச்சர்யங்கள் கொண்டிருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் “ஜமீல்”. என்னுடைய பெயரை விளம்பரப்படுத்தும் பொருட்டு இப்படி வைத்திருக்கிறேன் என தப்பாக நினைத்து விடாதீர்கள்.