மகாராஜா- விமர்சனம்
சிறிய கதைக்குள் பெரிய விசயங்களைப் பேசியுள்ளார் இநத் மகாராஜா
கதை நான்லீனியர் முறையில் அங்குமிங்குமாக நகர்கிறது. நாம் லீனியராகச் சொல்வோம். தன் வீட்டில் தன் மகளின் உயிரைக் காப்பாற்றிய குப்பைத் தொட்டியை காணவில்லை என காவல் நிலையம் வருகிறார் சலூன் கடை தொழிலாளியான ஹீரோ விஜய்சேதுபதி. இவர் சொல்லும் குப்பைத் தொட்டிக் கதையைக் கேட்டு டென்சன் ஆகிறார் இன்ஸ்பெக்டர் நட்டி. பின் ஒரு வழியாக பணபேரம் முடித்து டீலுக்கு ஓகே சொல்கிறார் நட்டி. குப்பைத் தொட்டி தேடும் படலம் நடக்க, மற்றொரு புறம் கொடூரமான கொலைகள் கொள்ளைகளை நடத்தி வருகிறார் அனுராக் காஷ்யப். அவரும் தன் மனைவி அபிராமியிடமும், தன் மகளிடமும் உயிராக இருக்கிறார். விஜய்சேதுபதியின் பயணத்திற்கும் அனுராக் வாழ்வுக்குமான தொடர்பு என்ன என்பதாக விரிகிறது படத்தின் திரைக்கதை
தனது 50-ஆவது படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஜய்சேதுபதி. ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோரிங்-ஐ அதிகரித்துக் கொண்டே செல்கிறார். அவரின் மகளாக நடித்தவரும் அட்டகாசம். அபிராமி தனக்கான வேலையைச் சரியாகச் செய்ய, அனுராக் காஷ்யப் மிரட்டியுள்ளார். சிங்கம் புலி ருத்ர தாண்டவமாடியுள்ளார். மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், அருள்தாஸ் எல்லாம் வந்து போகிறார்கள். பாய்ஸ் மணிகண்டன் ரகடான கேரக்டராக மனதில் நிற்கிறார்.
படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலையை இசை அமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். எடிட்டர் பிலோமின் ராஜ் செம்ம ஷார்ப்பாக வேலை செய்துள்ளார்
திரைக்கதை தான் ஒரு படத்தின் மேலான ஜீவன் என ரூம் போட்டு யோசித்து செதுக்கியுள்ளார் இயக்குநர் நித்திலன். அருமையான திரை எழுத்து. பெண்களை புனிதம் என்ற போர்வைக்குள் அடக்காமல் துணிவு என்ற சால்வை அணிவித்து பெருமைப் படுத்திய அந்த க்ளைமாக்ஸுக்காகவே இந்த மகாராஜாவிற்கு நாம் கப்பம் கட்டலாம்
3.25/5