ஹரிப்பிரியா நடிக்கும் “மாஸ்க்”!
சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘அருவா சண்ட’ , இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “மாஸ்க்”.
சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும் சிறுவயதிலேயே தேசிய விருது பெற்றவருமான விஜய ராகவேந்திரா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.தற்போது சசிகுமாருடன் “காமன் மேன்” படத்தில் நாயகியாக நடித்து வருபவரும், தெலுங்கு கன்னட திரையுலகின் முன்னணி நடிகையுமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.மாஸ்க்கில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் வேறுவிதமான ஹரிப்ரியாவைப் பார்க்கலாம்.