‘பிஸியான’ பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம்
இயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த “என்ன சத்தம் இந்த நேரம்” திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜயிடம் பத்தாண்டுகள் உதவியாளராக இருந்தவர்.
தற்போது, ராட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.தங்கச்சாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் எட்டுத் திக்கும் மதயானை திரைப்படத்தில் “நெல்லைச் சீமை இது நெல்வேலி பூமி இது” என்று திருநெல்வேலியின் பெருமைகளைச் சொல்லும் பாடலை எழுதியிருக்கிறார். இது முழுக்க முழுக்க நெல்லை வட்டர வழக்கிலேயே எழுதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர், காட்டுமல்லி, லொடுக்குபாண்டி மெய்மறந்தேன், தாட்டியன், கொட்டாங்குச்சி, யாவும் காதலே, கலைவாணர் நாடக மன்றம், காத்து, தம்பி வீரபாண்டியன் என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதிக் கொண்டிருக்கிறார்.
மேலும், இவர் ‘தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி’ எனும் காதல் கவிதை தொகுப்பும், ‘பட்டாம்பூச்சி வாசம்’ எனும் கவிதைத் தொகுப்பும் வெளியீட்டுள்ளார். விரைவில் முத்தங்கள் சார்ந்த “மையல் நேரத்துத் தேநீர்” எனும் கவிதைத் தொகுதியை வெளியிட திட்டமிட்டுள்ளார்.