பேசாம டைட்டிலை ‘இது நம்ம வாலு’ன்னு மாத்திடுங்களேன் சிம்பு!
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிம்புவின் சொந்தத் தயாரிப்பான ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்து விட்டார் இயக்குநர் பாண்டிராஜ்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு இன்னும் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. அதற்கு கால்ஷீட் கேட்டால் கூடுதலாக பணம் கேட்கிறார் என்று நயன்தாரா மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்தார்கள் டி.ஆரும், சிம்புவும்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
நயன்தாரா சிம்புவிடன் பணமே கேட்க வில்லையாம். மாறாக ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு 8 தடவை கால்ஷீட்டை ஒதுக்கிக் கொடுத்தும் அத்தனை கால்ஷீட்டையும் வீணடித்திருக்கிறது சிம்பு வட்டாராம்.
நெனைச்சா அடுத்த வாரமே படத்தை ரிலீஸ் பண்ணலாம். அந்தளவுக்கு படம் பக்காவா ரெடியாயிடுச்சு. ஆனா திடீர்னு சிம்புவும் அவங்க அப்பா டி.ஆரும் படத்துல ”யம்மாடி ஆத்தாடி” மாதிரி ஒரு குத்து சாங் இருந்தா படத்தோட பிஸினசுக்கு உதவியா இருக்கும்னு சொல்லி ஒரு ஸாங் சூட் பண்ணிக் கேட்டாங்க. நானும் தயாரிப்பாளரோட நலன் தான் முக்கியம்னு ஓ.கே சொன்னேன்.
அந்த ஷூட்டிங்குக்காகத்தான் நயன்தாராக்கிட்ட டேட்ஸ் கேட்டாங்க. ஆனால் ஏற்கனவே பல தடவை நயன் கொடுத்த கால்ஷீட்டை எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டதால அவங்க தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. அதை மனசுல வெச்சுக்கிட்டு நயன்தாரா கூடுதலா பணம் கேட்கிறாங்கன்னு நடிகர் சங்கத்துல புகார் கொடுத்துட்டாங்க.
ஆனா அது உண்மையே இல்லை என்று நடந்த உண்மையை பட்டென்று பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்.
நயன்தாராவும் நடிகர் சங்கத்துக்கு ‘இது நம்ம ஆளு’ பஞ்சாயத்து தொடர்பாக தன் பக்கத்து நியாயத்தை லெட்டராக கொடுத்திருக்கிறாராம்.
பேசாம ‘இது நம்ம ஆளு’ ங்கிறதுக்கு பதிலா ‘இது நம்ம வாலு’ன்னு டைட்டிலை மாத்திடுங்களேன் சிம்பு!