நெஞ்சம் மறப்பதில்லை- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நீண்டநாள் காத்திருப்பில் இருந்தபடம் நெஞ்சம் மறப்பதில்லை. கிட்டத்தட்ட படத்தின் டீசரை ரசிகர்கள் மறக்கக் கூடிய அளவிற்கு சென்ற பிறகு திடீரென இந்தப்படம் வெளியானது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.பெரும் பணக்காரர் ஒருவர் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை மடக்க நினைக்கிறார். அதன் முடிவும் விடிவும் என்ன என்பதே படத்தின் அவுட்லைன். அதைத் தாண்டி படத்தில் சில சுவாரசியமான விசயங்களும் இருக்கின்றன. இது ஒரு ஹாரர் படம் என்பது கூடுதல் கவனிப்பை பெறுகிறது.

தன் கரியரில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை யாரும் மறக்கக் கூடாது என்று வெறித்தனமாக நடித்துள்ளார் எஸ்.ஜே சூர்யா. முன்பாதியில் மனிதர் ரசிகர்களை அப்படியொரு எனர்ஜியோடு வைத்திருக்கிறார். படம் நெடுக அவரின் மேனரிசங்கள் ரசிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. படத்திற்கு பெரிய ப்ளஸ் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு. அவருக்கு அடுத்து ரெஜினா கசன்ட்ரா தனது நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். நந்திதா உள்ளிட்ட படத்தில் வரும் யாரும் பெரிதாக நடிப்பில் குறை வைக்கவில்லை. யுவன் சங்கர் ராஜா செல்வராகவன் படம் என்றால் மட்டும் எக்ஸ்ட்ரா எனர்ஜியோடு வேலை செய்வார் போல. பாடல்கள் பின்னணி இசை இரண்டிலுமே பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் ஆகத்தரம்!

ஒவ்வொரு கதாப்பாத்திர வார்ப்பிலும் தனி கவனம் செலுத்தி எழுதியிருக்கிறார் செல்வராகவன். படத்தில் அங்கங்கே ரைட்டிங்கில் அவரது தனித்துவம் மின்னுகிறது. முன்பாதியில் இருந்த எனர்ஜியை பின்பாதி வரை இழுத்து வந்திருந்தால் பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்திருக்கும். ஆயினும் இது ஜஸ்ட் லைக் தட் படமல்ல..என்சாய் பண்ணலாம்!
3/5