கண்டிஷன்களைப் போட்டு கடுப்பேத்துறார் – நிவேதா தாமஸ் செய்றது நியாயமா..?
‘பாபநாசம்’ படத்துக்கு முன்பு ஜெய்யுடன் ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிவேதா தாமஸ்.
அந்தப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டதால் ‘பாபநாசம்’ படத்தைத் தான் தமிழில் தனக்கு முதல் அறிமுகம் என்று சொல்லி வருகிறார்.
‘பாநாசம்’ படம் ஹிட்டானதில் உச்சி குளிர்ந்து போயிருக்கும் அவரைத் தேடிவரும் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருக்கிறது.
ஆனால் அதையெல்லாம் கமிட் செய்வதா வேண்டாமா? என்கிற பெருங்குழப்பத்தில் தான் இருக்கிறாராம் நிவேதா தாமஸ்.
எல்லாம் படிப்புச் சமாச்சாரம் தான்.
காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் காலேஜ் போகும் நாட்கள் தவிர மீதி லீவ் நாட்களில் மட்டுமே நடிப்பேன், அப்படின்னா என்கிட்ட வாங்க, அதேமாதிரி கவர்ச்சியாகவெல்லாம் நடிக்க மாட்டேன் என்று தன்னைத் தேடி வருகிற இயக்குநர்களிடம் ஆயிரத்தெட்டு கண்டிஷன்களைப் போடுகிறாராம்.
ஒரு படம் தான் ஹிட்டு ; அதுக்குள்ள ஆயிரத்தெட்டு கண்டிஷன்களா..? என்று எரிச்சலோடு திரும்புகிறது தேடிப்போகும் இயக்குநர் கூட்டம்.