எதுக்கெடுத்தாலும் மேனேஜரைப் பாரு… : பவுசு காட்டும் ‘பாபநாசம்’ நடிகை!
மலையாளம் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தவர் நிவேதா தாமஸ்.
வல்லிய கேரள குட்டியான இவர் சிறு வயதிலிருந்தே சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டாக படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்ட இவர் தமிழில் விஜய்யின் ‘குருவி’ ராகவா லாரன்ஸ் நடித்த ‘ராஜாதிராஜா’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
பிறகு வளர்ந்து குமரியானதும் இயக்குநர் சசிகுமார் தனது ‘போராளி’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தார். பிறகு ஜெய் நடித்த ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். விஜய்யின் ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார்.
இப்படி எந்த திட்டமிடலும் இல்லாமல் கிடைக்கிற கேரக்டர்களில் எல்லாம் நடித்தவருக்கு கமலின் பாபநாசம் படத்தில் தான் மிகப்பெரிய பெயர் கிடைத்திருக்கிறது.
பார்க்கிற ரசிகர்கள் மட்டுமில்லாமல் மீடியாக்கள் கூட அவரை போற்றி புகழ்வதால் அம்மணிக்கு இப்போது தலைகால் புரியவில்லை.
சமீபத்தில் இவருடைய பேட்டி வேண்டும் என்று எந்த நிருபர் போன் செய்தாலும் முதல்ல என்னோட மேனேஜர்கிட்ட பேசுங்க… அதுக்கப்புறம் என்னோட லைன்ல வாங்க என்று கெத்து காட்டுகிறாராம்.
அதோடு ஏதாவது புதுக்கம்பெனிகள் அழைத்தால் கூட அம்மணியின் பதில் இவ்வாறாகத்தான் இருக்கிறதாம்.
மேனேஜர்களை வைத்து முன்னுக்கு வந்த நடிகைகளை விட அவர்களால் பீல்டை வீட்டு காணாமல் போனவர்கள் அதிகம் என்பது பாவம் இந்த சின்னப் புள்ளைக்கு என்ன தெரியும்?