‘ஒ காதல் கண்மணி’ : உலகம் முழுவதும் ஏப்ரல் 17-ல் ரிலீஸ்
‘கடல்’ படத்தைத் தொடர்ந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘ஒ காதல் கண்மணி’.
துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், கனிகா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு மணிரத்னத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு சென்சாருக்கு அனுப்பப்பட்ட இப்படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.
இதையடுத்து இந்தப் படம் இந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல நல்ல தரமான வெற்றிப்படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்து வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.