ஹாரர் படத்தில் ‘அழகுப் பிசாசு’ சிருஷ்டி டாங்கே
நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படத்திற்கு “ஒரு நொடியில்’’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ், சிசர் மனோகர், பிரித்வி, விஜயன், அபூர்வா சிவா, கீர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
எழுதி இயக்குபவர் எம்.ஏ. சௌத்ரி. படம் பற்றி இயக்குனர் சௌத்ரியிடம் கேட்டோம்…
இது திகில் மற்றும் ஹாரர் சமந்தப்பட்ட படம். பார்வதிபுரம் என்ற ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஒரு தீய சக்தி. 500 ஆண்டுகளாக அந்த ஊருக்குள் யார் வந்தாலும் அவர்களை பலி வாங்கி விடுகிறது.
அந்த கிராமத்துக்குள் நுழைய குழந்தைகளை பலி கொடுத்து தனக்கு மாபெரும் சக்தி வர வேண்டும் என்று நினைக்கிறான் மந்திரவாதி ஒருவன். அவனது என்னத்தை முறியடித்து டிவி சேனல் நிருபர் மதன் குழந்தைகளை காப்பாற்றுவதுடன் பார்வதிபுர மர்ம முடுச்சை விடுவிப்பது தான் ஒரு நொடியில் படத்தின் கதை.
ஐந்நூறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாக சொல்லப்படும் இதே கதை தற்பொழுது குஜராத்தில் நிகழ்ந்ததாக சமீபத்தில் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது.
படு சுவாரஸ்யமான திரைக்கதையாக ஒரு நொடியில் உருவாகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார்.