இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் வெளியிட்ட திரைப்படம் “ஒரு நொடி”. அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடித்த ‘ஒரு நொடி’ படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகளிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் மணிவர்மனுக்கு தயாரிப்பாளர்கள் மதுரை அழகர் மூவிஸ் அழகர், மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் கே.ஜி.ரத்திஷ் ஆகிய மூன்று பேரும் கார் பரிசளித்து அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர். தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களும் இயக்குனரை வாழ்த்தினார்.