மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் ஓவியா! : ரசிகர்கள் குஷியோ குஷி..!

விஜய் டிவிக்காக கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் 100 வது நாளை எட்ட இருக்கிறது.
முன்னதாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற அதில் போட்டியாளராக வந்த நடிகை ஓவியா தான் பெரும்பங்கு வகித்தார். அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவுடன் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே மவுசு குறைந்தது.
இதனால் மீண்டும் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ஓவியாவிடம் பேசிப்பார்த்தது விஜய் டிவி நிர்வாகம். சம்பளம் கூட மற்றவர்களை விட உங்களுக்கு எஸ்க்ட்ராவாகத் தருகிறோம் என்றும் கொக்கியைப் போட்டது. ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் கிடைத்த சில கசப்பான அனுபவங்கள் காரணமாக கலந்து கொள்ள மாட்டேன் என்று மறுத்து வந்தார்.
இதற்கிடையே எதிர்வரும் 100வது நாள் எபிசோடில் ஏற்கனவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற அத்தனை போட்டியாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஸ்பெஷல் எபிசோடாக இருக்கப் போகிற அந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
அதை உறுதி செய்யும் விதமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நிகழ்ச்சி குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஓவியா ”உங்களோடு லைவ் சாட் செய்ய ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். காத்திருங்கள் பிக்பாஸ் 100வது நாள் எபிசோட் முடிந்ததும் நாம் சாட் செய்யலாம் என்று இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
ஆக, மீண்டும் தலைவி ஓவியாவின் தரிசனம் சின்னத்திரை வழியாகக் கிடைக்காதா? என்று ஏங்கிக் கிடந்த ஓவியா ஆர்மிகளுக்கு அவரது வருகை குறித்தான தகவல் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.