‘பாம்பு சட்டை’ ஷூட்டிங் ஓவர்!

Get real time updates directly on you device, subscribe now.

 

paambu-sattai

பாபிசிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆடம்தாசன் இயக்கும் ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Related Posts
1 of 23

சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தாமிரபரணி’ புகழ் முக்தா பானு, சார்லி, கே.ராஜன், சோமசுந்தரம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், சரவண சுப்பையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

“’பாம்பு சட்டை’ படத்தின் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடித்தாகி விட்டது. படத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிப்பதற்கு உதவியாய் இருந்த அத்தனை கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் சீரும்” எனக் கூறினார் இயக்குனர் ஆடம் தாசன்.