‘பாபநாசம்’ படத்துக்கு ஏன் ‘வரிச்சலுகை’ இல்லை : பரபரப்பான பின்னணி காரணங்கள்…

Get real time updates directly on you device, subscribe now.

papanasam

ம்ம படம் ‘யு’ சர்ட்டிபிகேட் வாங்கி விட்டாலே தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்து விடும் என்கிற கனவில் இருக்கும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு இடி இறங்கும் செய்தியாகத் தான் இது இருக்கும்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீசான பாபநாசம். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க மறுத்து விட்டது.

இதை வணிக வரித்துறையில் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலும் தெரிவித்துள்ள அரசு அதற்கான காரணங்களாக கீழ்க்கண்டவற்றை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“ஆபாசம் மற்றும் பிறமொழி இல்லாத திரைப்படம் என்றாலும், கதாநாயகன் கை விரல்களை ஒடிப்பது பார்க்க முடியவில்லை. பள்ளி மாணவியை அடித்து கொடுமை பண்ணுவது பரிதாபமாக உள்ளது. காவல் துறையினர் அதிகமாக கொடுமைப்படுத்துவதாக காண்பித்திருப்பது. பள்ளி மாணவியை குளிக்கும்போது படம் பிடித்து காண்பிப்பது இந்த காரணங்களினால் இந்தப்படம் வரிச்சலுகை கொடுப்பதற்கு தகுதியற்ற படமாகிறது என்று கூறியுள்ளனர்.

Related Posts
1 of 3

மேலும், ஒரு பள்ளி மாணவர் ஒரு மாணவியை நிர்வாணமாக படம் எடுப்பதும் அதைக் காண்பித்து அந்த மாணவர் அவளை பயமுறுத்தி கெடுக்க நினைப்பது, உண்மையை வரவழைக்க காவலர்கள் கதாநாயகரின் குடும்பத்தை அடித்து உதைப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

இதுபோன்ற காட்சிகள் அகற்ற வேண்டும் என்றும், குற்றம் செய்தவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டு வரிவிலக்கு அளிக்க மறுக்கிறோம்” என்று படம் பார்த்த தமிழக அரசு சார்ந்த குழு தெரிவித்திருக்கிறது.

அரசு சொல்லும் காரணங்கள் இதுவாக இருந்தாலும் ஜெயா டிவிக்கு இப்படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமையை கொடுக்காமல் சன் டிவிக்கு கொடுத்ததால் தான் அரசு இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் காரணங்களை சொல்கிறார்கள்.

எது எப்படியோ? ‘பாபநாசம்’ போன்ற நல்ல தரமான படத்துக்கு வரிச்சலுகை மறுப்பது தமிழில் அந்த மாதிரியான படங்களின் வரத்து குறைவதற்கே இது போன்ற நடவடிக்கைகள் வழிவகுக்கும் என்பது மட்டும் உண்மை.