கூவத்துக்கு முடிவு கட்ட பார்த்திபனின் யோசனை! : கேட்பாரா சென்னை மேயர்?
ஆர்ட்டிஸ் ஏ.பி.ஸ்ரீதர் தயாரித்த ‘மய்யம்’ படத்தின் சந்திப்பு வந்திருந்தார் நடிகர் பார்த்திபன்.
பார்த்திபன் மேடை ஏறினாலே முன்னால் இருப்பவர்கள் அவர் பேச்சைக் கேட்க ஆர்வமாகி விடுவார்கள். அந்தளவுக்கு அவர் பேச்சில் காமெடி இலையோடும்.
இந்த விழாவிலும் பேசிய அவர் சென்னையின் கருப்பு அடையாளமாக இருக்கும் கூவத்தை சுத்தப்படுத்த சூப்பரான ஐடியா ஒன்றைச் சொன்னார்.
”நான் சென்னைக்கு வெளியே ஒரு கிராமத்தில்தான் இப்போது இருக்கிறேன். அங்குள்ள பசுமையான சூழ்நிலை பார்க்க ரம்மியமாக இருக்கிறது. மேலும் அங்கு நான் நிறைய செடி, கொடி, மரங்களை நட முடிவு செய்தேன்.
கிராமத்து மக்கள் கழிவுகளை மக்க வைத்து உரமாக பயன் படுத்துவதை பார்த்தேன். நிறைய உரம் தேவைப்படும் நிலையில் கூவம் ஆற்றில் உள்ள கழிவுகளை பயன்படுத்த முடியுமா என்று விசாரித்தேன். பயன்படுத்தலாம் என்று ஓர் அனுபவசாலி விவசாயி கூறினார்
கூவத்தில் உள்ள கழிவுகளை உரமாக பயன்படுத்தும் திட்டத்தை முதலில் செயல்படுத்த நான் திட்டமிட்டுள்ளேன். நான் மட்டும் இல்லாமல், இயற்கை உரம் தேவைப்படுகிற மற்றவர்களும் இந்தமுறையை பின்பற்ற வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
இத்திட்டத்தை நாம் செய்தால் கூவமும் சுத்தமாகும். இயற்கை உரத்தின் பயன்பாடும் அதிகரிக்கும் . ஆரோக்கிய உணவு , பெருகும் மரங்களால் மழைவளம் ஆகியவை அதிகம் ஆகும். அதிக வாய்ப்புள்ளது.
என்னுடைய இந்த திட்டத்தை சென்னை நகர மேயரிடம் விளக்குவதற்காக அவரை தொடர்பு கொண்டேன். அவர் சி.எம். டி மீட்டிங்கில் பிசியாக இருப்பதாக சொன்னார்கள். அதற்கு முன் ஊடகங்கள் மூலம் மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காவே இங்கே இது பற்றி பேசுகிறேன்.” என்றார் பார்த்திபன்.
செய்யுமா அரசாங்கம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்…