ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரு ‘ஐட்டம்’ : பத்த வெச்சுட்டீங்களே பார்த்திபன் சார்..!
ஒரு இயக்குநராக முத்திரைப் பதிக்கிறாரோ இல்லையோ? ஒரு நடிகராகவும், சிறப்பு அழைப்பாளராகவும் எப்போதுமே முத்திரைப் பதித்து வருகிறார் நடிகர் பார்த்திபன்.
ஒரு திரைப்பட விழா என்றால் ”எப்பத்தான் இவரு எடத்தை காலி பண்ணுவாரோ..?” என்று பேசியே அறுக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் ‘இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா?’ என்று ஏங்க
வைப்பவர் பார்த்திபன்.
இன்றைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் ஆடியோ பங்ஷனில் தனது ட்ரேட்மார்க் பேச்சில் காமெடி கொஞ்சம் தூக்கலாக பேசினார் பார்த்திபன். அப்போது அவர் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமாரை ‘ஐட்டம்’ என்று சொல்லவும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அதை ஒரு கிளிக்கதையுடன் ஒப்பிட்டிப் பேசியதாவது :
ஒரு வியாபாரிக்கிட்ட ஒரு லேடி கிளி வாங்கினாங்க… அந்தக் கிளி உண்மையை மட்டுமே பேசுற கிளின்னு வியாபாரி சொல்லவும் அதை செக் பண்ணிப் பார்க்க ஆசைப்பட்ட லேடி நான் அழகா இருக்கேனா? இல்லையா?ன்னு கேட்டாங்க. அதுக்கு அந்தக்கிளி ‘நீ ஒரு ஐட்டம்’னு சொல்லிச்சு.
உடனே டென்ஷனான அந்த லேடி என்ன கிளி இப்படியெல்லாம் பேசுதுன்னு சொன்னாங்க. உடனே பதறிப்போன அந்த வியாபாரி நெறைய உண்மை பேச வேண்டாம் கொஞ்சமாப் பேசினாப் போதும்னு சொன்னார்.
ஓ.கேன்னு தலையாட்டின அந்தக் கிளிக்கிட்ட நான் என் வீட்டுக்கு ஒரு ஆம்பளையோட வந்தா நீ அவரை என்னன்னு நெனைப்பேன்னு கேட்டாங்க. அதுக்கு அந்தக் கிளி அது உங்களோட வீட்டுக்காரர்னு நெனைப்பேன்னு சொல்லிச்சு. ரெண்டாவது தடவை நான் ரெண்டு ஆண்களோட வீட்டுக்கு வந்த நீ என்ன நெனைப்பேன்னு கேட்டாங்க. அதுக்கு அந்தக் கிளி ஒருத்தர் உங்க வீட்டுக்காரர், இன்னொருத்தவர் உங்க வீட்டுக்காரரோட ப்ரெண்ட்டுன்னு நெனைப்பேன்னு சொல்லிச்சு.
மூன்றாவது தடவை நான் மூன்று ஆண்களோட வீட்டுக்கு வந்த நீ என்ன நெனைப்பேன்னு கேட்டாங்க. அதுக்கு அந்தக் கிளி ஒருத்தர் உங்க வீட்டுக்காரர் இன்னொருத்தர் உங்க வீட்டுக்காரரோட தம்பி. மூன்றாவது ஆள் அவரோட ப்ரெண்ட்டுன்னு நெனைப்பேன்னு சொல்லிச்சு.
உடனே அந்த அம்மா நான் நாலாவது தடவை நாலு ஆண்களோட வீட்டுக்கு வந்தா என்ன நெனைப்பேன்னு கேட்டாங்க. உடனே அந்தக்கிளி கடைக்காரரைப் பார்த்து ”நான் தான் அப்பவே சொன்னேன்ல இந்த லேடி ஒரு ஐட்டம்”னு சொல்லிச்சாம்.
அதுமாதிரி ஜி.வி.பிரகாஷை இந்தப் படத்தோட பாடல்கள்ல பார்த்தப்போ ஒரு ‘ஐட்டம்’ மாதிரியே இருக்கார். ரெண்டு கன்னங்கள் கெடைச்சாலே நாம பூந்து விளையாடுவோம். அதுவே ரெண்டு பொண்ணுங்க கெடைச்சா சும்மாவா சொல்லணும்.
சும்மா பூந்து விளையாடியிருக்கார் ஜீ.வி. அவரோட்ய ‘டார்லிங்’ படத்தை எனக்கு பார்க்கிற சந்தர்ப்பம் கெடைக்கல. ஆனால் இந்தப் படத்தோட ட்ரெய்லர், சாங்க்ஸ் ரெண்டையும் பார்க்கிறப்போ பார்த்தே ஆகணும்னு தோணுது என்றார் பார்த்திபன்.
பார்த்திபனின் இந்தப் பேச்சைக் கேட்டு வெட்கத்தில் நெளிந்தார் ஜி.வி.பிரகாஷ்குமார்.