“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படம் விரைவில் திரையில்!

Get real time updates directly on you device, subscribe now.

Lights On Media வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது. மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ளது. காட்டுக்குள் நடக்கும் பரபர பயணத்தின் சிறு துளியை அறிமுகப்படுத்தும் வகையில் மிரள வைக்கும் உருவாக்கத்தில் வெளியான முன்னோட்டம் ரசிகர்கள் விமர்சகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

#ParunthaaguthuOorkuruvi #பருந்தாகுது ஊர்க்குருவி