பிரபலங்கள் இணையும் “பத்து தல” திரைப்படம் !

Get real time updates directly on you device, subscribe now.

எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வரும் கோடை காலத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், படத்தில் இணைந்து வரும் நடிகர் பட்டாளம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச்செய்கிறது. சமீபத்தில் ப்ரியா பவானி சங்கர் படத்தில் நாயகியாக இணைந்த நிலையில் தற்போது தமிழக இலக்கிய ஆளுமை, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் அசுரன் படப்புகழ் டிஜே இப்படத்தின் நடிகர் குழுவில் இணைந்துள்ளனர்.

இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா கூறியதாவது…
தமிழக இலக்கிய ஆளுமை, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் டிஜே அவர்களை எங்கள் படத்திற்கு, வரவேற்பதில் மகிழ்சியடைகிறோம். மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவித்திறமையும், இலக்கிய திறமையும் பிரசித்தி பெற்றது. இப்படத்தில் சமூக சேவகர் உதயமூர்த்தி எனும் கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நிறைய நேர்மறைதன்மை கொண்ட, படத்தின் கதையில் அழுத்தம் தரும் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம் அது.

Related Posts
1 of 6

டிஜே அவர்களின் புகழும் “அசுரன்” போன்ற படத்தில் அவர் காட்டிய நடிப்பு திறமையும் அனைவரும் அறிந்ததே. மிக அழுத்தமான நெகட்டிவ் தன்மை கொண்ட பாத்திரத்தை அப்படத்தில் அவர் செய்திருந்தார். இப்படத்திற்கான கதாப்பாத்திரத்திற்காக, அவரை அணுகிய போது அவர் லண்டனில் இருந்தார். எங்கள் முழு உரையாடலும் zoom calls ல் தான் நடந்தது. அவருக்கு லுக் டெஸ்ட் எடுப்பது என்பது இயலாது என்றே நாங்கள் நினைத்தோம் ஆனால் அவரே ப்ரத்யேகமாக கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார்செய்து கொண்டு லண்டனில் இருந்து கொண்டே லுக் டெஸ்ட் செய்தார்.

அவரது லுக் டெஸ்ட் புகைப்படம் மிக அட்டகாசமாக கதாப்பாத்திரத்துடன் பொருந்தியிருந்தது. அதனை படத்தின் விளம்பரங்களுக்கான போஸ்டரில் பயன்படுத்தவுள்ளோம். இப்படத்தின் மிகச்சிறந்த திறமையாளர்களுடன், பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.“பத்து தல” படத்தினை “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இயக்குகிறார். தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார்.