பயணிகள் கவனிக்கவும்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு நல்ல சினிமாவிற்கான எல்லா அடையாளங்களோடும் வந்திருக்கிறது பயணிகள் கவனிக்கவும்

காய்ச்சலில் ட்ரீட்மெண்ட் எடுக்கும் மகளோடு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தூங்காமல் விழித்திருந்த களைப்பில் மெட்ரோ ரெயிலில் அசந்து தூங்கிவிடுகிறார் விதார்த். அவர் குடித்துவிட்டு மெட்ரோவில் படுத்திருக்கிறார் என்பதாக ஒரு போட்டோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிந்து விடுகிறார் கருணாகரன். இதனால் விதார்த்தின் வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் வர, அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதே உணர்ச்சி மிகுந்த கதை

நடிகர் விதார்த்தின் சினிமா கரியரில் இந்தப்படம் மிக முக்கியமான படம்..அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் விதார்த். மிகச்சிறப்பான நடிப்பு. காது கேளாதவராகவும், வாய்பேசா முடியாதவராகவும் அவர் காட்டியிருக்கும் முகமொழியும், உடல்மொழியும் அபாரம். அவரது மனைவியாக நடித்துள்ள லெட்சுமியும் விதார்த்திற்குச் சற்றும் குறைவில்லாமல் சமபலத்தில் நடித்துள்ளார். துபாய் ரிட்டர்ன் இளைஞனாக கருணாகரனும் குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டும் இடங்களில் அட சொல்ல வைக்கிறார். படத்தின் ஸ்ட்ராங்க் பில்லர் எது என்றால் அது கதாப்பாத்திரங்களின் தேர்வும், அவர்களின் நடிப்பும் தான்

வசனப்பதிவில் தனிக்கவனம் செலுத்திருக்கும் டெக்னிக்கல் டீமும் பாராட்டுக்குரியது. ஒளிப்பதிவில் இருக்கும் எளிமையே படத்தை எதார்த்த களத்தில் தள்ளி சிறப்பு சேர்க்கிறது. பின்னணி இசை அமைதி தழுவும் சில இடங்களில் அசத்தியிருக்கிறது.

2 மணி நேரத்திற்கும் மேல் ஓடும் படத்தில் பின்பாதியில் கதையை நகர்த்தச் செல்ல போதுமான ஐடியா இல்லாதது சிறுகுறையே. என்றாலும் சமுதாயத்திற்கு அவசியமான கருத்தொன்றை பதிவு செய்திருப்பதால் பயணிகள் கவனிக்கவும் படத்தை நிச்சயமாக குடும்பத்தோடு ரசித்து கவனிக்கலாம்
3.5/5