ஓபாமா வந்தாலே ஓரமாத்தான் நிக்கணுமாம்! : மொட்டை ராஜேந்திரனின் ஆ… ஆ…..

Get real time updates directly on you device, subscribe now.

 

mottai

அடுத்தடுத்த பேய்ப்படங்கள் வரிசைக்கட்டிக்கிட்டு வந்து நிக்கிறப்போ இன்னொரு பேய்ப்படமான்னு கேட்டுறாதீங்க… இதுவரைக்கும் எத்தனையோ பேய்ப்படங்களை நீங்க  பார்த்திருந்தாலும் இந்தப் பேய்ப்படம் அந்த வகையாறாவுல சேர்த்தி இல்ல. அதுகள்ல இருந்து இது ரொம்ப வித்தியாசமா இருக்கும் என்றவாரே பேச ஆரம்பித்தார் ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தின் இயக்குநர் கண்மணி.

”இந்தப் படத்தோட கதையை என்னோட தயாரிப்பாளர்கிட்ட சொல்லப் போனேன். என்னக்கதைன்னு கேட்டார். பேய்ன்னு சொல்லவும் எனக்கே சலிச்சுப் போச்சுப்பா..ன்னு சொன்னார். அதெல்லாம் சரி, ஒருதடவை கதையை கேட்டுப் பாருங்க, அப்புறமா இதை தயாரிக்கலாமா? வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கங்கன்னு கதையை சொன்னேன். இன்னைக்கு படப்பிடிப்பை முடிச்சாச்சு.

ஹீரோ ஜூவரத்னமும், ஹீரோயினா ஈசான்யாவும் நடிக்கிறாங்க… புதுமுகங்களை வெச்சு படமெடுக்கிறோம். அப்போ சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் கொஞ்சம் தெரிஞ்ச முகமா இருந்தா நல்லா இருக்குமேன்னு தான் என்னோட நண்பர் தம்பி ராமையாவையும், மொட்டை ராஜேந்திரனையும் கமிட் பண்ணினோம். இவங்க ரெண்டு பேருமே இன்னைக்கு தமிழ்சினிமாவுல சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ரொம்ப பிஸியா இருக்காங்க” என்றவர் படத்தின் கதை பக்கம் திரும்பினார்.

”இந்த உலகத்துல பேயே இல்லேன்னு நம்புற ஹீரோ, ஆனா பேய்ங்கிற வார்த்தையை கேட்டாலே நடுங்கிற தம்பி ராமையா. ரெண்டு பேரும் ஒரு கட்டத்துல மீட் பண்ணி ப்ரெண்ட்டாகும் போது ஒரு சம்பவம் நடக்குது. அதிலேர்ந்து பேய்க்கு பயப்படுற தம்பி ராமையா கொஞ்சம் கொஞ்சமா தெம்பாகிறார். ஆனா தெம்பா இருந்தா ஹீரோவோ பேய்ன்னு வார்த்தையை கேட்ட உடனே பயந்து ஓடுறார். இதைத்தான் காமெடி, என்டர்டெயிண்மென்ட்டா சொல்லிருக்கேன்” என்றவர் இன்னொரு சீக்ரெட்டையும் சொன்னார்.

”தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் ரெண்டு பேரும் பல படங்கள்ல விதவிதமான கேரக்டர்கள் பண்ணிட்டாங்க. நாம அவங்களை வழக்கமா யூஸ் பண்ணாம ஏதாவது வித்தியாசமா பண்ணனும்னு யோசிச்சப்பத்தான் அந்த ஐடியா தோணுச்சு. ரெண்டு பேரையும் சொந்தக் குரல்ல பாட வெச்சா என்னங்கிறது தான் அந்த ஐடியா. ரெண்டு பேர்கிட்டேயும் சொன்னேன். உடனே வந்து பாடிக்கொடுத்தாங்க. போட்டுப் பார்த்தா செம லோக்கலான சாங். தாறுமாறா இருந்துச்சு. இன்னைக்கு ‘யு-ட்யுப்ல’ அந்த சாங் தான் பெரிய ஹிட் என்றார்” உற்சாகத்துடன்.

அப்படியென்னா சாங்க்குன்னு கேட்கிறவங்களுக்காக அந்த பாட்டுல இருந்து ரெண்டு வரி இதோ!

”ஓபாமா வந்தா ஓரம் போய் நிக்கச்சொல்லு…

அப்பாயின்மெண்ட் இல்ல, அப்பாலிக்கா போகச்சொல்லு…”