போக்கிரி மன்னன் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

SRI

டைட்டிலே இது எப்படிப்பட்ட படம் என்பதைச் சொல்லி விடும்.

இடைவேளைக்கு முன்புவரை ஊருக்குள் போக்கிரித்தனங்களை செய்து கொண்டிருக்கும் ஹீரோ, இடைவேளைக்குப் பிறகு பொறுப்புள்ள மனிதனாக அதாவது மன்னன் ரேஞ்சுக்கு திருந்துவது தான் விஷயமே…

சரி மேட்டருக்கு வருவோம்..!

விஜய் படம் வந்தால் தியேட்டரில் கொண்டாட்டம், அதை விட்டால் நண்பர்களுடன் டாஸ்மாக்கில் மதுவுடன் மயக்கம் என சதா எந்த நேரமும் ஜாலியாக இருக்கும் ஹீரோ ஸ்ரீதர்.

அப்படிப்பட்டவர் ஹீரோயின் ஸ்பூர்த்தியை கலாய்த்து பின்னர் அவரையே காதலியாக்கிக் கொள்கிறார்.

அப்போது தான் துபாயில் சம்பாதித்த காசைக்கொண்டு சொந்த ஊரில் கவுன்சிலர் ஆகும் ஆசையில் வருகிறார் சிங்கம்புலி. அவரை கவுன்சிலர் ஆக்குகிறேன் பேர்வழி இருக்கிற

காசையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையை போட்டு தன் காதலி, நண்பர்களுக்கு செலவு செய்கிறார்.

இப்படி எந்த பொறுப்பும் இல்லாமல் திரியும் ஹீரோவின் நண்பன் ஒருவன் ஒருநாள் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கிக் குடித்து பரிதாபமாக உயிரிழக்கிறான், அடுத்து ஸ்ரீதர் மாஸ்டரின் தங்கை திருமணத்துக்கு தயாராகும் மாப்பிள்ளையும் அதேபோல டாஸ்மாக் சரக்கை குடித்து உயிரை விடுகிறான் இந்த இரண்டு சம்பவங்களும் ஸ்ரீதர் மாஸ்டரை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

இரண்டு பேரும் குடித்த சரக்குகள் ஒரே பிராண்ட் ஆக இருக்க, ஸ்ரீதர் மாஸ்டருக்கு சந்தேகம் வருகிறது. அதன் பின்னணியைத் தேடிச்செல்லும் போது கள்ளச் சரக்கு கும்பல் ஒன்று இருப்பதை தெரிந்து கொள்கிறார்.

அந்த நாசகார கும்பலை ஒழித்து கள்ளச்சாராயத்துக்கு முடிவு கட்டினாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ஸ்ரீதர் மாஸ்டர் டான்ஸ் ஆடினாலே தியேட்டர் ஸ்க்ரீன் கிழிஞ்சு தொங்கும்! இதுல சண்டை வேற போட்டுருக்கார்… அதகளத்துக்கு கேட்கவா வேண்டும். பாடல் காட்சிகளில் மட்டுமில்லாமல்

சண்டைக் காட்சிகளிலும் பட்டையை கெளப்புகிறார்.

ஹீரோயின் ஸ்பூர்த்தி என்னத்தை சாப்பிட்டு வளர்ந்தாரோ தெரியவில்லை. கொழுக் மொழுக் பப்பாளி பழமாட்டம் நமீதா இல்லாத குறையை போக்குகிறார்.

ஹீரோயின் திட்டுவதை ஆனந்தத்தோடு ரசிக்கும் ஸ்ரீதர் மாஸ்டரின் காட்சிகள் புதுசாக இருந்தாலும், முதலில் மோதல் அதிலிருந்து ஆரம்பிக்கிற காதல் என ஹீரோ – ஹீரோயின் காதல்

போர்ஷன் அருதப்பழசு.

கவுன்சிலராகி விட வேண்டும் என்பதற்காக ஸ்ரீதர் மாஸ்டரிடம் லட்சம் லட்சமாக பணத்தைக் கொடுத்து ஏமாறும் சிங்கம்புலியின் போர்ஷன் கலகலபூட்டுகின்றன.

இப்படி ஒரு ஏமாளி கவுன்சிலரானால் அவரை நம்பி ஓட்டு போடும் மக்களின் கதை என்னவாகும் என்று நினைக்கும் போது ஜிப்பு வருது ஜிப்பு….

கள்ளச்சாராயம் எந்தளவுக்கு கெடுதியோ? அதே அளவுக்குத்தான் இன்றைக்கு அரசாங்கத்தால் விற்கப்படும் சரக்குகளும் மனிதர்களின் உயிருக்கு உலை வைப்பவையாக இருக்கின்றது என்கிற விஷயத்தை தைரியமாக பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராகௌ மாதேஸ்.

அந்த தைரியத்துக்காகவே இந்த ‘போக்கிரி’யை ரசிகர்கள் ‘மன்னன்’ ஆக்கலாம்.