பூக்கி- விமர்சனம்

காதலர் தினத்தை குறிவைத்து வந்திருக்கும் பூக்கி பந்தயம் அடிக்குமா?
ஹீரோ அஜய் தீசன், ஹீரோயின் தனுஷா இருவரும் காதலர்கள். காதலர்கள் என்றால் ஈகோ இருக்கும். ஈகோ இருந்தால் சண்டை நடக்கும். சண்டை நடந்தால் பிரிவு இருக்கும். பிரிவு இருந்தால் வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை கசந்தால் ஞானம் கிடைக்கும். யெஸ் ஹீரோவும் ஹீரோயினியும் ஞானமடைந்து மீண்டும் இணைந்து கொள்வதே படத்தின் கதை
அஜய் தீஷன் இப்படத்தில் ஒரு நல்ல ஹீரோவாக பரிணமித்துள்ளார். எனோஷ்னல் காமெடி ஆக்சன் என எல்லாமே அவருக்கு கைகூடி வந்துள்ளது. அறிமுக நடிகை தனுஷா ஆகச்சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவர் ஹீரோவிடம் ரியாக்ட் பண்ணும் க்ளைமாக்ஸ் காட்சி அட்டகாசம். தன் அனுபவ நடிப்பால் இரு காட்சிகளை உயிரோட்டமாக்கியுள்ளார் பாண்டியராஜன். ஆதித்யா கதிரின் பன்ச்கள் பெரிதாக ஒட்டவில்லை. விவேக் பிரசன்னா கேர்க்டரை இன்னும் ஸ்ட்ராங் செய்திருக்கலாம். ஏனைய கேரக்டர்கள் எல்லோரும் ஒகே ரகம்
இயக்குநரான கணேஷ் சந்திரா தான் படத்தின் கேமராமேனும் கூட. சலீம் உள்ளிட்ட பல படங்களில் நல்ல ஒளிப்பதிவை தந்தவர். அவர் படத்தில் விடுவாரா? அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஜென்ஸி கிட்ஸுக்கு ஏற்ற பின்னணி இசையையும் பாடல்களையும் வழங்கியுள்ளார். எடிட்டிங்கும் அவரே. படத்தை இன்னும் ஷார்ப்பாக கட் செய்திருக்கலாம்
ரொம்ப ரொம்ப சிம்பிளான கதை. நாம் எளிதாக யூகிக்கும் முடிவு என படம் சற்று சங்கடத்தோடு தான் பயணிக்கிறது. ஆங்காங்கே இருக்கும் சில க்யூட் மொமெண்ட்ஸ் தான் படத்தை காப்பாற்றுகின்றன. முன்பாதியில் இன்னும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்க முடியும். கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள புதிய பரிதி பல இடங்களில் அட சொல்ல வைத்திருக்கிறார். மெயின் கேரக்டர்களுக்கான சிக்கலை இன்னும் ஆழமாக அணுகியிருக்கலாம். கணேஷ் சந்திராவின் மேக்கிங் சிறப்பாக இருப்பது பெரும் ஆறுதல். சூப்பருமில்லை சுமாருமில்லை என்ற கேட்டகிரியில் வரும் இந்த பூக்கியை ஒருமுறை பார்க்கலாம்
3/5