‘சாமி’ படத்தில் நடிக்க படாதபாடு பட்ட பிரியங்கா!

Get real time updates directly on you device, subscribe now.

kangaroo

‘கங்காரு’ படத்தில் குட்டி கங்காருவாக அதாவது தங்கையாக நடித்திருப்பவர் பிரியங்கா. அவர் ‘படத்தின்அனுபவம் பற்றிக் கூறும் போது.

“நான் நடித்த முதல்படம் ‘அகடம்’ கின்னஸ் சாதனைப் படம். அடுத்த படம் தான் ‘கங்காரு’.இது நல்ல கதைக்காக சிறந்த நடிப்புக்காக பேசப்பட இருக்கும் சாதனைப்படம் என்பேன்.

என் கேரக்டரில் நடிக்க பலர் வந்து இருந்தாலும் என்னையே சாமி சார் தேர்வு செய்தார். காரணம் தேர்வு செய்யும் போது ஸ்டில்ஸ் எடுத்தார்கள். ரெண்டு, மூன்று வசனங்களை பேசச் சொன்னார். ஒரு எமோஷனல் சீனை நடித்துக் காட்டச் சொன்னார். நடித்துக் காட்டினேன், அதுவும் கிளிசரின் இல்லாமல் நடித்துக் காட்டினேன். அவ்வளவு தான் அது பிடித்துப் போய்சாமி சார் ‘நீதான் குட்டி கங்காருவா நடிக்கிறே…’ என்றார்.

Related Posts
1 of 2

அதேபோல் படப்பிடிப்பு தொடங்கி ரெண்டாவது நாளே ஒரு காட்சி. என் லவ்வர் இறந்து விடுவார். படிகளில் ஓடி வந்து அழ வேண்டும். படி சறுக்கி கைகளில் அடிபட்டு சிராய்ப்பு… எல்லாம் வந்து விட்டது. அப்போதும் கிளிசரின் இல்லாமல் அழுது விட்டேன். நான் நடித்ததைப் பார்த்து அடிபட்டதை பார்த்து யூனிட்டே கண் கலங்கினார்கள்.

அர்ஜுனா என் அண்ணனாக வருகிறார். நடிக்கும் முன் நாங்கள் கலந்து பேசி புரிந்து நடித்தோம்.எதையும் ஒரு முறை மானிட்டர் பார்த்து நடித்தது சுலபமாக இருந்தது.

சாமி சார் நான் நடித்த ஒரு காட்சியில் ‘நான் எதிர் பார்த்ததை விட நல்லா பண்ணிட்டே’ என்றார். எனக்கு அப்போதே விருது கிடைத்த மகிழ்ச்சி. படத்தின் வெற்றி அடுத்த விருதாக அமையும் என்று நம்புகிறேன்.” என்கிறார்.