PT sir- விமர்சனம்
சமூகப்பாடம் எடுக்கும் பிடி வாத்தியார்
ஹீரோ ஆதி ஒரு கல்லூரியின் PT வாத்தியார். அவருக்கு அங்கே ஒரு காதலும் வருகிறது. யாரிடமும் சண்டையிடக்கூடாது என்பதை தனது அம்மா சொன்னதால் அமைதியே உருவானவராக நாட்களை கடத்தி வருகிறார் ஆதி. இந்நிலையில் கல்லூரி முதல்வரிடமே நேரடியாக மோதும் சூழல் ஹீரோவிற்கு வருகிறது. அடுத்தடுத்து ஹீரோ வாழ்வில் என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை
ஆதி எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் மேம்பட்ட நடிப்பை வழங்கியிருக்கலாம். காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். ஹீரோயின் தனக்கு வழங்கிய கேரக்டரை, அவருக்கு என்ன வருமோ அதைச் செய்துள்ளார். தியாகராஜன் உள்பட ஏனையோரும் நன்றாக நடித்துள்ளனர்
இசையில் நல்ல உணர்ச்சி வெளிப்பட்டுள்ளது. பாடல்கள் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவில் நல்ல குவாலிட்டி தெரிகிறது.
மிக முக்கியமான சமூகத்தில் அடிக்கடி பேசி நினைவூட்ட வேண்டிய விசயத்தை கதையாக கையில் எடுத்துள்ளார் இயக்குநர். அதற்கு முதலில் பாராட்டுக்கள். ஆனால் அதை தேர்ந்த திரைக்கதையாக்கத் தவறியுள்ளார். இன்னும் நன்றாக மெனக்கெட்டிருந்தால் PT Sir Good sir என போற்றப்பட்டிருப்பார்
2.75/5