‘புலி’ ஸ்டில்லை ஷேர் செய்தால் போலீசில் புகார் : இதென்னடா விஜய் ரசிகர்களுக்கு வந்த சோதனை?

Get real time updates directly on you device, subscribe now.

vijay

விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களும், படத்தின் இயக்குநர் சிம்புதேவனும் திடீரென்று இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

புலி படத்தோட ஸ்டில்களை நாங்க அதிகாரப்பூர்வமா மீடியாக்களுக்கு கொடுக்குறதுக்கு முன்னாடியே அது ஒவ்வொரு ஸ்டில்லா ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக்ன்னு வந்துக்கிட்டே இருக்கு.

என்னடா இது நாம கொடுக்காமலேயே வந்துக்கிட்டு இருக்கேன்னு விசாரிக்க ஆரம்பிச்சா எங்க படத்தோட டிசைனர்கிட்ட இருந்துதான் போயிருக்குன்னு தெரிஞ்சது என்று பேச ஆரம்பித்தார் இயக்குநர் சிம்பு தேவன்.

‘ஆரம்பத்தில் நாங்க டினியூஜான்ங்கிறவரை டிசைனரா நியமிச்சோம். அப்போது நிறைய ஸ்டில்கள் அடங்கிய ஹாட் டிஸ்க்கை அவரிடம் ஒப்படைச்சோம். அதற்கப்புறம் அவருடைய அணுகுமுறை  பிடிக்காததால் நாங்க அவரிடமிருந்து விலகி வேறொருவர் மூலமா டிசைன் பண்ணிகிட்டு இருக்கோம். இந்த நேரத்தில் தொடர்ந்து சமூகவலைதளங்களில் விஜய்யின் புலி பட ஸ்டில்கள் தினம் ஒன்னா வெளிவருது. அவ்வளவும் நாங்கள் அவரிடம் கொடுத்த ஹாட் டிஸ்க்குல இருந்த ஸ்டில்கள். டினியூஜானிடம் கேட்டால், எங்கிட்ட மூணு பேர் வேலை பார்த்தாங்க. இப்போ அவங்க என்னிடம் இல்ல. அவங்க வேலையாதான் இருக்கும்னு சொல்றார். நாங்கள் சைபர் கிரைம்ல புகார் கொடுத்துருக்கோம்’ என்றார்.

சிம்புதேவன் அப்படிச் சொன்னதும் புலி படத்தோட டீஸரை 4 லட்சம் பேர் பார்த்திருக்காங்கன்னு நீங்களே பப்ளிசிட்டி பண்றீங்க… அப்படியிருக்கும் போது இதையும் பப்ளிசிட்டின்னு விட்டுட வேண்டியது தானே? என்றார் ஒரு நிருபர்.

Related Posts
1 of 78

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத சிம்புதேவன் ”சார் என் வீட்ல உள்ள பொருளை எனக்கே தெரியாமல் ஒருத்தன் வெச்சிருக்கிறதைப் பார்த்துட்டு என்னால எப்படி சார் அமைதியா இருக்க முடியும்? என்றார் விரக்தியோடு.

பின்னர் பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் “ சார் பல கோடிகளைப் போட்டு இவ்வளவு பிரம்மாண்டப்படத்தை எடுக்கிற எங்களுக்கு பப்ளிசிட்டிக்கு எந்த நேரத்துல எந்த ஸ்டில்லை ரிலீஸ் பண்ணனும், அதுல எந்தெந்த ஆர்ட்டிஸ்ட் இருக்கணும்? இதையெல்லாம் யோசிச்சுத்தானே வெச்சிருப்போம். அப்படி இருக்கும் போது விஜய் திரும்பி நிக்கிற மாதிரியோ, குனிஞ்சு நிக்கிற மாதிரியோ ஸ்டில் வந்துச்சுன்னா அதை எப்படி சரியான பப்ளிசிட்டியா இருக்கும் என்றவர் கடைசியாகச் சொன்னது தான் ஹைலைட்.

இந்த ஸ்டில்லை பேஸ்புக், ட்விட்டர்களில் ஷேர் பண்ணியவங்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு சைபர் கிரைம்ல புகார் கொடுத்தொருக்கோம். அதை வெளியிட்டவர்கள் மீது மட்டுமல்ல, ஷேர் பண்ணிவங்க மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லுவோம் என்றார்.

புலி படத்தோட ஸ்டில்களை ஷேர் பண்ற 98 சதவீதம் பேர் யாரு?ன்னு நாம சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன?

இதென்னடா விஜய் ரசிகர்களுக்கு வந்த சோதனை?