‘புலி’ ட்ரெய்லருக்கு எதிரான வதந்தீ… : விஜய் ரசிகர்கள் கொதிப்பு
விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘புலி’ படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு அதாவது 20 ஆம் ரிலீசானது.
ட்ரெய்லர் வெளியான 10 மணி நேரத்துக்குள் சுமார் 10 மில்லியன் ரசிகர்களை ஈர்த்து சாதனை படைத்தது.
இந்த சூழலில் புலி படத்தின் ட்ரெய்லரை பற்றி இணையதளங்களில் மோசமாக விமர்சிக்கும் சில ஊடகத்தின் மீது விஜய் ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
ட்ரெய்லரின் ஸ்ரீதேவியின் மேக்கப் ரொம்பக் கேவலமாக இருந்ததாகவும், ட்ரெய்லர் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்றும் எழுதியிருந்தார்கள்.
இதை படித்த விஜய் ரசிகர்கள் ஆத்திரப்பட, எங்களுக்கு ட்ரெய்லர் பிடித்திருக்கிறது. பிடிக்காதவர்கள் விஜய் ரசிகர்கள் என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.