‘ஹனி ரோஸின் ‘ரேச்சல்’ படத்தின் டீசர் வெளியீ டு!

Get real time updates directly on you device, subscribe now.

நடிகை ஹனி ரோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரேச்சல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த கிரிப்பிங் டீசர் ஆக்‌ஷன் பிரியர்களுக்கென அதிரடி ஆக்‌ஷன் மற்றும் இரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கொண்டுள்ளது.

புகழ் பெற்ற இயக்குநர் அப்ரிட் ஷைனின் இணை தயாரிப்பிலும் இணை எழுத்திலும் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்தினி பாலா இயக்கியுள்ளார். ஹனி ரோஸின் ஃபிட்னஸ் மற்றும் நடிப்புத் துறையில் அவரின் அனுபவத்தை இந்தப் படம் சரியாக பயன்படுத்தியிருப்பதை டீசரில் பார்க்க முடிகிறது.

இப்படத்தில் பாபு ராஜ், கலாபவன் ஷாஜோன், ரோஷன் பஷீர், சந்து சலீம்குமார், ராதிகா ராதாகிருஷ்ணன், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ஜோஜி, தினேஷ் பிரபாகர், பாலி வல்சன், வந்திதா மனோகரன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

பாதுஷா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் பாதுஷா என்எம், ராஜன் சிராயில் மற்றும் அப்ரிட் ஷைன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதையை ராகுல் மணப்பட்டு, திரைக்கதையை ராகுல் மணப்பட்டு மற்றும் அப்ரிட் ஷைன் எழுதியுள்ளனர்.