”கண்ணா கலக்கிட்டீங்க…” : மாநகரம் டைரக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி!
“மாநகரம்” திரைப்படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் மாநகரம் திரைப்படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். படத்தை பார்த்து ரசித்தவர் உடனடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “கண்ணா ஹா ஹா” !!! படம் பார்த்தேன் கலக்கிட்டிங்க, சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க, கலக்குங்க என்று கூறியுள்ளார்.
எஸ்.ஆர் பிபு தயாரிப்பில் “ஜோக்கர்” திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரிப்பாளர் எஸ்.பிரபு மற்றும் குழுவினரை அழைத்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தரமான படைப்பு என்று எல்லோரும் பாராட்டும் ”மாநகரம்” திரைப்படத்தை பார்த்து விட்டு தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டியிருக்கிறார்.