ரெபல்- விமர்சனம்
ஜி.வியின் வரவிருக்கும் தொடர் சம்பவங்களில் இது முதல் சம்பவம்
கதை?
உண்மைக் கதையென சொல்லப்படும் இக்கதையில் ஜிவியின் பின்புலம் மூணாறு கூலித்தொழிலாளிகள் சார்ந்த பின்புலம்..அங்குள்ள எளிய மக்களின் நம்பிக்கையாக ஜிவி பாண்டி வினோத் ஆகியோர்கள் இருக்கிறார்கள்..அதாவது கல்வி மட்டும் தான் குறைந்த கூலி வாழ்வில் இருந்து தங்களை காப்பாற்றும் என்ற நிஜத்தை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை மூலதனமாக கொண்டு படிக்கும் அவர்களுக்கு பாலக்காடு அரசு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைக்கிறது. அங்கு தீண்டாமை கொடுமையும் இருக்கிறது. அதை மீறி இந்த எளியப்பிள்ளைகள் எப்படி கரையேறுகிறார்கள் என்பதே கதை
கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுக்க போராடியுள்ளார் ஜிவி. வினோத், பாண்டி ஆகியோர் ஓகே ரகம். கருணாஸ், சுப்பிரமணிய சிவா தங்கள் வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். கதை மாந்தர்களுக்கான எழுத்தில் இன்னும் அழுத்தம் சேர்த்திருந்தால் அனைவரும் இன்னும் நடிப்பில் ஸ்கோரிங் செய்திருப்பார்கள்
பின்னணி இசையால் ஒரு படத்தை பாசிட்டிவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளார் ஜிவி. இசை ஓகேவாக அமைந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு அழகாக அமைந்துள்ளது. கலை இயக்கம் நல்ல கலையின் வெளிப்பாடு எனலாம்
வெறுப்பு வாதத்தை முன் வைத்து இயக்குநர் படத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு தான். ஆனால் படம் அதன் பாடுபொருளுக்கான தேவையை ரசிகனுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். அப்போது தான் ஆடியன்ஸ் நம் ஐடியாலஜிக்குள் வருவார்கள். அந்த விசயத்தில் ரெபல் கோல் போட தவறிவிட்டது. முன்பாதி பவராக இருந்த திரைக்கதை பின்பாதியில் தவறாகப் பயணித்து நம்மைச் சோதித்து விட்டது
2.5/5