மீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்த ஹன்ஷிகா!
இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் ‘கெத்து’ படத்தை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது.
‘என்றென்றும் புன்னகை’ வெற்றி படத்தை இயக்கிய அஹமத் இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராதாரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் நீதிமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறவுள்ளது.
ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் 10-வது படமான இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.