அருண் விஜய் நடிக்கும் “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…
ரெட்ட தல அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். இன்று 2024ல் நல்ல சினிமா வருவதில்லை என்ற குற்றசாட்டு வருகிறது. அதைப் போக்கும் நிறுவனமாகப் பிடிஜி இருக்கும் என நம்புகிறேன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். மனோஜ் பினோ என் நண்பர், சினிமா மீது தீவிரக் காதல் கொண்டவர். வெற்றிப் பெற வாழ்த்துக்கள். என்னை என் தம்பியை விட அண்ணா என அன்பாக அழைப்பவர் அருண்விஜய். கிட்டத்தட்ட இத்தனைக் காலம் ஃபிட்னெஸாக உடலை வைத்துக்கொள்வது அத்தனை எளிதில்லை, இந்த உழைப்பிற்கு அருண்விஜய்க்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும். சாம் சி எஸ் உடன் வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், அவருக்கு வாழ்த்துகள். சித்தி இத்னானிக்கும் மற்றும் என்னுடன் வேலைப் பார்த்த தான்யாவிற்கும் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் ஆண்டனி பேசியதாவது…
இந்தப்படத்தில் பங்குகொள்வது மகிழ்ச்சி. இது நல்ல படமாக இருக்கும். அருண்விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் யோகி பேசியதாவது…
பாபி சார், மனோஜ் சார் மற்றும் திருக்குமரன் சாருக்கு நன்றி. இப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. எனக்குத் தந்துள்ள கதாப்பாத்திரத்தைச் சிறப்பாக செய்வேன். அனைவருக்கும் நன்றி.
நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…
திருக்குமரன் சார், பாபி சார், மனோஜ் சார் அனைவருக்கும் நன்றி. என்னை இந்தப்படத்திற்காகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அருண்விஜய் சாரை ரொம்ப காலமாகத் தெரியும், பல நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. பிட்னெஸாக உடம்பை வைத்துக்கொள்வது மிகக் கஷ்டம் எனத் தெரியும். அவருக்கு இன்னும் பல வெற்றிகள் குவியும். என் படக்குழுவினருக்கும் மீடியாவிற்கும் என் நன்றி.
நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…
பாபி சாரை இப்போது தான் நேரில் பார்க்கிறேன் அவர் அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அப்டேட் தந்துகொண்டே இருப்பார். அவரை நேரில் பார்த்தது மகிழ்ச்சி. என்னை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர்த் திருக்குமரனுக்கு நன்றி. மனோஜ் சாருக்கும் நன்றி. அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.