ரோமியோ- விமர்சனம்
சைலண்ட் ஆன ரோமியோ தன் மனைவியை எப்படி சாதிக்க வைக்கிறார் என்பதே ரோமியோ ஒன்லைன்
சென்னையில் வேலை செய்வதாக வீட்டை ஏமாற்றிவிட்டு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு சுற்றும் மிருளாளினியை டக்கென மனைவியாக்கிக் கொள்கிறார் விஜய் ஆண்டனி. இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லாத மிருளாளினி விஜய் ஆண்டனியை வெறுக்கிறார். வெறுக்கும் மனைவியை விரும்ப வைக்க,அவருக்கு விருப்பமான சினிமாவை தயாரிக்க விஜய் ஆண்டனி முன் வர, அடுத்தடுத்து நடைபெறும் களேபரங்கள் தான் படத்தின் கதை
நீங்க எந்த பால் போட்டாலும் நான் டொக்கு தான் வைப்பேன் என RCP-வைப்லே நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இன்னும் துள்ளல் வேண்டும் சார். மிருளாளினி இளைஞர்களை உசுப்பேத்தியும், விஜய் ஆண்டனியை கடுப்பேத்தியும் ஜம்முன்னு நடித்துள்ளார். ஏனைய கேரக்டர்கள் எல்லோருமே சிறப்பாக ஸ்கோர் செய்கிறார்கள்.
படத்தில் இசை ஆங்காங்கே தன் இருப்பை நியாயமாக நினைவூட்டுகிறது. CG ஏரியா இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். கேமராமேன் தன்னுடைய அதிக பட்ச நல்ல விஷுவலை கொடுத்துள்ளார்
மார்க்கெட்டில் வொர்க்வுட் ஆகும் கதை தான். ஆனால் அதை தறிகெட்டு ஓடும் திரைக்கதையால் வீணடித்துள்ளனர். ஹீரோவிற்குள் இருக்கும் ஒரு முக்கியமான எமோஷ்னல் பின்னணியை மிக வீக்-ஆக காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் லாஜிக் என்பது மருந்திற்குமில்லை. நல்ல நல்ல ஐடியாக்களைப் பிடித்து ஒரு அட்டகாசமான வீக்-என்ட் படமாக மாற்றியிருக்க ரோமியோவை அரதப்பழசான ட்ரீட்மென்டால் வீக்-ஆக்கிவிட்டார்கள்
2.5/5