ஆஸ்திரேலிய அழகியுடன் ஜப்பான், மலேசியாவில் ‘சாஹசம்’ செய்த பிரசாந்த்!
வெகு பிரமாண்டமாக தயாராகி வரும் பிரஷாந்தின் ‘சாஹசம்’. இதில் கதாநாயகியாக அமண்டா அறிமுகமாகிறார். சாஹசம் படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை.
கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மலேசியா மற்றும் ஜப்பானில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. பிரஷாந்துடன் இந்தியாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட நடனகலைஞர்கள் மற்றும் மலேசிய நடனகலைஞர்கள் சேர்ந்து ஆடிய ‘’சாயாங் கு’’ என்ற பாடல் காட்சி மலேசியா மொத்தமும் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது.
பாபா பாஸ்கர் விசேஷமான நடன அசைவுகளை சாஹசம் படத்திற்காக பிரத்யேகமாக அமைத்துள்ளார். ‘சாயாங் கு’ என்றால் மலேசிய பாஷையில் கண்ணே, அன்பே, ஆருயிரே என்று காதலர்களுக்குள் வழங்கும் ஒரு பாசமான அழைப்பு. ‘சாயாங் கு’ பாடல் மலேசியா மட்டுமல்லாமல் உலகிலுள்ள மொத்த இளைஞர்களுக்கும், காதலர்களுக்கும் கீதமாகுமாம்.
மலேசியாவை தொடர்ந்து ‘ஆங்கிரி பேர்ட் (Angry Bird) என்ற பாடல் ஜப்பானில் 8 நாட்கள் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட ஜப்பானிய நடன கலைஞர்கள் கலந்து கொண்டு ஜப்பானில் எழில் கொஞ்சும் இயற்கை அழகுமிக்க இடங்களில் பிரஷாந்த், அமண்டாவுடன் சேர்ந்து நடனமாடும் காட்சிகளை காயத்ரி ரகுராம் நேர்த்தியாக படமாக்கினார். இந்த பாடலை இந்தியாவில் தலைசிறந்த பாடகரான மோஹித் சவுகான் பாடியுள்ளார்.
ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி ‘சாஹசம்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். மிகப்பெரிய நடிகரான பிரஷாந்துடன் இணைந்து அற்புதமாக உருவாகும் சாஹசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என மனம் உருகிப் போகிறாராம் அமண்டா.
திரைக்கதை, வசனம் எழுதி ஏராளமான பொருட்செலவில் இப்படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் தயாரிக்கிறார் நடிகர் தியாகராஜன். முடிவடையும் தருவாயிலுள்ள பிரஷாந்தின் சாஹசம் படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம். ‘சாஹசம்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா வெகு விரைவில் நடைபெறும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாஹசம் படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணம் இருக்குமாம்.