சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனார் சமுத்திரகனி!
சமுத்திரக்கனி ஒரு இயக்குனராக பிஸியாக இருப்பதை விட ஒரு நடிகராக பிஸியாக இருக்கிறார்.
வேலையில்லா பட்டதாரி, காடு, சண்டமாருதம் ஆகிய படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்த சமுத்திரகனி, தற்போது ஆதார், மாஸ், விசாரணை, கொளஞ்சி, ரஜினி முருகன், ராவா, பெட்டிக்கடை, அதிபர் என கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.
இப்போதைக்கு அப்பா கேரக்டருக்கோ, அண்ணன் கேரக்டருக்கோ அவரை விட்டால் ஆள் இல்லை என்பதால் பல இயக்குனர்களின் சாய்ஸ் சமுத்திரக்கனி தான்.
இப்படி தொடர்ந்து பல படங்களில் நேர்மையான, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வந்த அவரை சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் வில்லனாக்கியிருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.
ஏற்கனவே சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்த சமுத்திரகனி, அதன்பிறகு தொடர்ந்து குணச்சித்திர கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்போது மீண்டும் இப்படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி.