ZEE5ல் ஜூலை 18ல் ஸ்ட்ரீமாகிறது‘சட்டமும் நீதியும்’சீரிஸ் !

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு, தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸை வரும் ஜூலை 18, 2025 அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை மாநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன், தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் அவரது சாதனை இந்நிகழ்வினில் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சரவணன், தற்போது தீவிரமும், உணர்வுகளும் கலந்த நுணுக்கமான நடிப்புடன் மீண்டும் நாயகனாகத் திரும்புகிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.