ஒரு படத்திற்கு 77 விருதுகளா?
குறும்படங்கள் சினிமாவில் நுழைவதற்கான விச்ட்டிங் கார்டு என்று சொல்வார்கள். அந்தவகையில் ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான ஜூட் பீட்டர் டேமியான், டைரக்சன் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக சஷ்தி என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த குறும்படம். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த ‘சஷ்தி’ குறும்படம் கிட்டத்தட்ட 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 77 விருதுகளை வென்றுள்ளது.இந்த குறும்பட திரையிடலுடன் கூடிய பத்திரிக்கையாளர் சந்திப்பும் விருது பெற்ற கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
#Shashthi