அட சண்ட போடாதீங்கப்பா… : அஜித் – விஜய் ரசிகர்களை கூல் பண்ணிய சிம்பு

Get real time updates directly on you device, subscribe now.

ajith---vijay

நாளுக்கு நாள் குழாயடிச் சண்டை போல மாறி வருகிறது ட்விட்டரில் அஜித் – விஜய் ரசிகர்கள் போட்டுக்கொள்ளும் குடுமிபிடிச் சண்டை.

”நீ ஒண்ண ட்ரெண்ட்டிங்க்ல உட்டேன்னா நான் ஒண்ணை விடுவேன்” என்று இரண்டு பேரின் ரசிகர்களும் மாறிமாறி தூங்காமல் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனையே பார்த்துக் கொண்டு ட்விட்டரே கதி என்று கிடக்கிறார்கள்.

இன்று விஜய் பிறந்தநாள் அதையொட்டி அவர் நடித்து வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் இணையத்தில் நடந்தேறியது.

இதில் தான் வந்தது பிரச்சனை.

விஜய் பிறந்த நாளை முன்னிட்டி கடந்த மூன்று நாட்களாக அவர் சம்பந்தப்பட்ட செய்திகளே ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்ட்டிங்கில் முன்னணியில் இருந்தது.

Related Posts
1 of 143

#HBDDearVijay #VIJAY_22YearsOfGloriousJourney #CleanIndiamissionwithvijay #PuliFirstLook #PuliTeaser என்று அடுத்தடுத்த ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து மூணு நாளா? என்று கடுப்பான அஜித் ரசிகர்கள் அந்த ட்ரெண்ட்டிங்க்கை பொறுக்க முடியாமல் விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்ய #VijayCurseOfCinema என்ற பெயரில் ஒரு புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்தியா முழுவதும் ட்ரெண்ட் செய்தார்கள்.

இப்படி அஜித் – விஜய் ரசிகர்கள் மாத்தி மாத்தி புது ட்ரெண்ட்டில் சண்டைப் போட்டுக்கொண்டிருக்க இதுநாள் வரையிலும் சும்மா இருந்த சிம்பு இப்போதும் சும்மா இருந்தால் நல்லாயிருக்காது என்று நினைத்து இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் பஞ்சாயத்து பேசி வைத்திருக்கிறார்.

அதில் தேவையில்லாம சண்டை போடாதீங்க… விஜய்க்கு எதிராகவும் எந்த ஹேஷ்டேக்கையும் உருவாக்காதீங்க என்று அஜித் ரசிகர்களிடம் அன்போடு கேட்டுக் கொண்டார். ஆனால் இரண்டு பேரின் ரசிகர்களும் சிம்பு சொல்வதை கேட்டபாடில்லை.

அந்தச் சண்டை இன்னும் அதே ட்ரெண்ட்டிங்கில் தான் போய்க்கொண்டிருக்கிறது.