”அவங்களை விட்டுடுங்க…” : கமல் ரசிகர்களை மன்னித்த சிவகார்த்திகேயன்
மதுரை விமான நிலையத்தில் சிவகார்த்திகேயன் மீது நடந்த ரசிகர்களின் தாக்குதல் பெரிய சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.
இன்னும் இரண்டு வாரங்களுக்கு இந்த விவகாரத்தின் சூடு குறையாது போலிருக்கிறது.
தாக்கியது கமல் ரசிகர்கள் தான் என்று தெரிய வரவும் ரஜினி, அஜித் இருவருடைய ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு பலத்த ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்கள்.
ட்விட்டரில் ‘ஐ சப்போர்ட் சிவகார்த்திகேயன்’ என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்திருந்தார்கள்.
அப்படி ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கு மறக்காமல் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
’என்னை யாரும் அடிக்கவில்லை’ என்று சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் சொல்ல, கமல்ஹாசனோ ‘சிவகார்த்திகேயனை அடித்தவர்கள் என்னுடைய ரசிகர்களே இல்லை’ என்று மீடியாக்களிடம் சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையே சிவகார்த்திகேயனை பாய்ந்து வந்து அடித்த இரண்டு ரசிகர்களை வீடியோவில் அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் முயற்சி இன்று காலை போலீஸ் தரப்பில் நடந்ததாம்,
ஆனால் தகவல் சிவகார்த்திகேயன் காதுகளை எட்டவும் ”அவர்கள் மீது பரிதாப்பட்டு எந்த நடவடிக்கையும் வேண்டாம், அவர்களை விட்டு விடுங்கள்” என்று சொல்லி விட்டாராம்.
மனசுன்னா அது இப்படித்தான் இருக்கணும்!